பக்கம்:அறுந்த தந்தி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாஸ்ய நடிகர்

மகாத்மா காந்தி, ஹரிஜன காலேஜுக்கு நிதி சேர்ப் பதற்காக மீனுட்சி நாடக சபையார் ஒரு நாள் நாடகம் நடத்த ஒப்புக்கொண்டார்கள். அன்று வசூலா கும் தொகை முழுவதும் ஒரு தம்பிடி குறையாமல் காலேஜ் நிதிக்குச் சேர்த்துவிட வேண்டுமென்பது நாடக சபையின் அதிபர் குமரகுருபா முதலியாருடைய அபிப் பிராயம். இது வரையிலும் எந்த நாடகத்திலும் கச்சேரி யிலும் சேராத அளவுக்கு அன்று வசூல் ஆகவேண்டு மென்று அவர் திட்டம் போட்டார்.

கலையிலும் சரி, லெளகிகத்திலும் சரி, அவர் வல்ல வர். நடிகர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களே கன்ருக நடிக்கச் செய்யும் உபாயங்கள் அவருக்குத் தெரி யும். அதற்குமேல், அவர்களுடைய நடிப்பைப்பற்றி யும், நாடகத்தின் சிறப்பைப்பற்றியும் மிகவும் சிறந்த விமரிசனங்கள் பத்திரிகைகளில் வெளியாகுமாறு செய்ய வும் தெரியும். எந்த ஊருக்குப் போனுலும் முதலில் அந்த ஊர்ப் போலீஸ்காார் அவர் கைக்குள் அகப்பட் விடுவர். அடுத்த படியாக முனிவலிபாலிடித் தலை வரை அவர் வசப்படுத்துவார். பத்திரிகை கிருபர்கள், காங்கிரஸ்காரர்கள், சுயமரியாதைத் தலைவர்கள், பிரசித்தி பெற்ற பெண்ணுரிமைத் தொண்டர்கள், ஹரிஜனப் பிரதி நிதிகள் என்று நாலுபேர் காதிலும் கண்ணிலும் படும் கோஷ்டியினர் யாவரும் அவருக்குச் சிநேகமாகிவிடுவார்

EGYT s

எந்த ஊரிலும் அவருடைய நாடகங்கள் சப்பையாகப் போனதே இல்லை. எந்தப் பக்கம் மரம் சாயும், எப்படி வெட்ட வேண்டும் என்ற தோதுகளை அவரிடம் பாடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/34&oldid=535275" இலிருந்து மீள்விக்கப்பட்டது