பக்கம்:அறுந்த தந்தி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறுந்த தந்தி

திக் கொடுத்துவிட்டுத் தம் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று குமரகுருபரர், நடராஜ பிள்ளையைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்; காலில் விழப் போன வரைத் தடுத்து, வேறு வழி இல்லாமையால் அக்த ஹாஸ்ய நடிகர் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, குமர குருபரர் செய்த விளம்பரத்துக்குக் கேட்க வேண்டுமா? பல காலமாக இழந்திருத்த காட்சியைக் காணலாம் என்ற ஆசையை, அவர் பொதுஜனங்களிடம் எழுப்பிவிட்டார். ஹரிஜன காலேஜ் சகாய கிதி என்ற காாணங்கூடத் தேவை இல்லாமற் போயிற்று ; ஜனங்களின் ஆவலே அந்த அளவுக்குத் தாண்டி முடுக்கிவிட்டார் அவர்.

குழந்தையின் நிலை டாக்டர்கள் கையில் இல்லை. ஆன ஆலும் அவர்கள் தைரிய வார்த்தைகளையே சொல்லி வந்தார் கள். சாதாரணமாகவே அபாய நிலையை வெளிப்படை யாகச் சொல்லும் வழக்கம் டாக்டர்களிடம் இல்லை. அது வும் இந்த விஷயத்தில், எத்தனையோ பெரிய மனிதர்களும் பொதுஜனங்களும் நடராஜ பிள்ளையை எதிர்பார்த்து கிற்கிறபோது அவருக்கு அதைரியம் ஊட்டலாமா?

'நீங்கள் தாராளமாகப் போய் வரலாம். கொஞ்சங் கூடக் கவலையே வேண்டாம். குழந்தை கண்ணேத் திறக் காமல் படுத்திருக்கிறதே என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். இந்த வியாதிக்கு அப்படித்தான் இருக்கும். கடவுள் நோயாளிக்கு நோயின் உபத்திரவம் இல்லாமல் இருக்கச் செய்யும் உபாயங்களில் இது ஒன்று' என்று மதுரைப் பெரிய டாக்டர் சொன்னர். குமரகுருபர முதலியாரும் அதை ஆமோதித்தார். -

குழந்தைக்கு ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது? என்று கேட்டார் கடர்ாஜபிள்ளை. -

' என்ன ப்படிக் கேட்கிறீர்கள் ? ஆபத்து கோ இடமே ஆபதிஆதி

'என் கண்மணி எழுந்திருந்து அப்பா என்று கூப்பிடு வான?' என்று சொல்லும்போதே அவர் கண்ணிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/39&oldid=535280" இலிருந்து மீள்விக்கப்பட்டது