பக்கம்:அறுந்த தந்தி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாஸ்ய நடிகர் 33

பலபலவென்று நீர்த்துளிகள் உதிர்ந்தன. குழந்தையின் அருமை அவருக்குத் தெரியும்.

'அடடா! என்ன இப்படிக் கோழை மனசோடு இருக்கிறீர்கள்? இதைவிட அபாயமான கேஸ்-களை யெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். இன்னும் நாலு நாளில் எல்லாம் வாசியாகிவிடும்” என்று குமரகுருபார் நட ராஜபிள்ளையின் முதுகைத் தடவிக்கொண்டே சொன்னர்.

ծ r: - - o 3. 'இங்கே நான் இல்லாத சமயத்தில். . . . . நடராஜ

பிள்ளை விம்மி அழத் தொடங்கினர். ஆம், எவரைக் கொண்டு குமரகுருபரர் சிரிப்பை விலைக்கு விற்ருரோ அந்த நகைச் சுவை நடராஜர், ஹாஸ்ய சக்காவர்த்தி, அந்த வியாபாரியின் அணைப்பிலே இருந்தும் அழுதார்.

டாக்டர் ஆறுதல் சொன்னர். நண்பர்கள் சொன் ஞர்கள். கடைசியில் அவர் மனைவிகூட, மீனுட்சி அம்மன் காப்பாற்றுவாள். இவ்வளவு பெரியவர்கள் ஆசீர்வாதம் விண்போகாது. நீங்கள் தைரியமாகப் போய் வாருங் கள்' என்று தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு சொன் ளுள். இதுதான் சமயம் என்று குமரகுருபரர், 'என்ன தம்பி, உங்கள் வீட்டில் இருக்கிற தைரியங்கூட உங்களுக்கு இல்லையே! அவர்கள் போய் வரும்படி சொல்கிருர்கள். பெற்ற தாயைக்காட்டிலுமா உங்களுக்குக் கவலை? நீங் களே வருத்தப்பட்டால், வீணுக அதைரியம் அடைந்தால், அவர்கள் எப்படி ஆறுதல் அடைவார்கள்? டாக்டர வர்களை இங்கேயே இருக்கும்படி ஏற்பாடு செய்கிறேன். அவர்களுக்கு எவ்வளவு காரியம் இருந்தாலும் அவை களேயெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நீங்கள் வரும் வரையில் இங்கேயே இருப்பார்கள்......என்ன டாக் டர், நான் சொல்வது சரிதானே?' என்ருர்.

டாக்டர் உடனே, ஆகா, அப்படியே செய்கிறேன். எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. என்னுல் ஹரிஜன நிதிக்கு விசேஷ சகாயம் செய்ய முடியாவிட்டாலும் இக் தத் தொண்டையாவது செய்கிறேன்” என்ருர்.

அ.அ. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/40&oldid=535281" இலிருந்து மீள்விக்கப்பட்டது