பக்கம்:அறுந்த தந்தி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அறுந்த தந்தி

கடைசியில் ஒருவாறு மதுரை வருவதற்கு நடராஜ பிள்ளை சம்மதப்பட்டார். குமரகுருபார் செய்த ஜாலங்களால் அவர் வழிக்கு வந்தார். -

மதுரைக்குப் புறப்பட்டார் ஹாஸ்ய நடிகர். 'ஏதாவது அபாயமாளுல் உடனே தந்தி கொடுங்கள்’’ என்று டாக்டரிடம் சொல்லிப் புறப்பட்டார். 'அதற்குத் தேவையே இராது" என்று பதில் வந்தது.

அத்தனே கூட்டத்தை எந்தக் காலத்திலும் பார்த்த தில்லை; இனியும் பார்க்கப் போவதில்லை. ஒரு லக்ஷம் ரூபாய்க்கு மேல் வசூலாயிற்று. மதுரை முழுவதும் திமி லோகப்பட்டது. 'ஹாஸ்ய நடிகர் நடராஜ பிள்ளை இதற் காக மாணுவ ஸ்தையில் இருக்கும் தம் குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கிருர்' என்ற செய்தி அவரை ஒரு பெரிய தியாக மூர்த்தியாக நினைக்கச் செய்தது. 'அப்பூதியடிகள், இறந்துபோன தம் மகனே மறைத்து வைத்துத் திருநாவுக்கரசருக்கு விருத்து செய்தாராம்! இது அது மாதிரி அல்லவோ இருக்கிறது!’ என்ருர் ஒரு ரவலிகர். பக்கத்தில் இருந்தவர் அவர் முதுகில் ஒங்கி ஒர் அடி கொடுத்து, என்ன ஐயா, அபசகுனமாகப் பேசு கிறீர்? வாயை அடக்கும்’ என்ருர், •

நாடகம் தொடங்கியது. 'கடவுளே, இன்று நாடகம் முடிகிறவரையில் நடராஜ பிள்ளையின் குழந்தை உயிரோடு இருக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண் டார் குமரகுருபரர். அதற்குப் பிறகு?’ என்ரு கேட் கிறீர்கள் ? அதைப்பற்றி அவருக்குக் கவலே இல்லை!

நாடகத்தில், வேண்டுமென்றே நடராஜ பிள்ளைக்கு எவ்வளவு நடிப்புக்கு இடம் உண்டோ அவ்வளவையும் கொடுக்காமல் குறைத்திருந்தார்கள். அவர் மனம் இல்லா மல், ஜீவன் இல்லாமல் நடித்தார். ஆனல் பொதுஜனங் கள் அந்த நடிப்பில் யாதொரு வேற்ற மையையும் கான வில்லை. எப்போதையும்விட அதிகமாகக் கைதட்டிஞர் கள் ; குதூகலித்தார்கள். அவர் பல நாட்கள் அவர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/41&oldid=535282" இலிருந்து மீள்விக்கப்பட்டது