பக்கம்:அறுந்த தந்தி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வச் செயல்

'நீங்கள் தீபாவளிக்கு வருவதை ஒவ்வொரு கணமும்

எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.அப்பா உங்கள் தகப்பணுருக்குக் கடிதாசு எழுதியிருக்கிரு.ர். இன்னும் ஒரு வாாந்தான் இருக்கிறது. அதற்குள் ஒவ்வொரு கிமிஷ

ே இ 33

மும் ஒவ்வொரு யுகம்போலத் தோன்றுகிறது. . . .

கடிதத்தின் இந்தப் பகுதியைக் கணேசன் திருப்பித் திருப்பிப் படித்தான். அவன் அன்புக்கு உகந்த காதலிக்கு ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தோன்றுகிறதாம்; அவ னுக்கோ ஒவ்வொரு கணமும் யுகமாகத் தோன்ற ஆரம் பித்துவிட்டதே! காதல் என்பது மைக்ராஸ்கோப்போ, ஒரு கணத்தை ஒரு யுகமாகப் பெருக்கிக் காட்ட!

கடிதத்தைப் படித்துப் படித்து ஆனந்தத்தில் அமிழ்த் திருந்த அவனுக்கு, அணுக்குண்ட்ை வீசினதுபோல் ஆயிற்று, அவன் தகப்பளுர் கிருஷ்ணசுவாமி ஐயர் எழு திய கடிதம் வந்தபோது. அவனுடைய கண்ணுட்டியின் கடிதம் கிடைத்த இரண்டாவது நாளே அக்கடிதம் வந்து சேர்ந்து, அவனது கற்பனே உலகத்து மாடமாளிகை களைத் தகர்த்து எறிந்துவிட்டது.

"...உன் மாமனுர் கடிதம் எழுதியிருக்கிரு.ர். இந்த வருஷம் பாட்டி செத்துப் போனதை வியாஜமாகக் கொண்டு தலைத் தீபாவளியை கிறுத்தக்கூடாதென்றும் வயசானவர்கள் காலமானதைப் பெரிய துக்கமாகக் கொண்டாடுவதில்லையென்றும் எழுதி இருக்கிரு.ர். வாஸ்தவர்தான். பல இடங்களில் அப்படித்தான் செய்கி முர்கள். இந்தத் தடவை உன்னே மாத்திரம் விழுப்புரத் துக்கு அனுப்பித் தலைத் தீபாவளியை நடத்த ஏற்பாடு செய்யலாம் என்பதுதான் என் உத்தேசம். நம் குடும்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/44&oldid=535285" இலிருந்து மீள்விக்கப்பட்டது