பக்கம்:அறுந்த தந்தி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வச் செயல் 39

வாங்கிச் சங்கிலி பண்ணிக்கொண்டாள்? அதற்கெல் லாம், இழவு கொண்டாட மறந்து போயிற்ருே?எனக்கு அப்போதே தெரியும். ஒவ்வொருத்தியும் தான் மாட்டுப்பெண்ணுக இருக்கிறபோது இருக்கிற தினுசு வேறேதான்; அவளே ஒரு பெண்ணுக்கு மாமியார் பதவி வகித்த பிற்பாடு நடக்கிற தினுகே வேறு தான். பாவம்! சின்னஞ்சிறு வயசில் ஆசையோடு அகமுடை யானே ப் பார்க்க வேண்டுமென்று காத்திருக்கும் லசஷ்மி யின் மனசை அம்மா தெரிந்துகொள்ள முடியாதா? அப்பாவுக்குத் தெரிகிறதே! எல்லாம் கொடுங்கோல் ஆட்சி! மாமியார் என்ற அகங்காரத்தின் விளைவு! கல் யாணத்தின்போதே அது சொத்தை, இது சொள்ளை என்று சம்பந்திகளைப்பற்றிக் குறை கூறின. இவளுக்கு, நல்ல எண்ணம் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து கொண்டே வருகிறது.”

இன்னும் பல பலவாறெல்லாம் எண்ணிஞன். அவன் கண்முன் அவன் தாய் வாசலில் கின்று கதவை மூடிவிட்டு, போகாதே!” என்று பயங்காசொரூபத்தோடு பயமுறுத்துவது போன்ற காட்சிதான் உண்டாயிற்று. அடுத்த கணம் காட்சி மாறியது. அப்பா முன் வந்தார்.

இந்தப் பிராமணர் இருக்கிருரே, இவருக்குத் துளி யாவது தைரியம் உண்டா? ஒரு பெண்பிள்ளை சொல்வது, அதற்குத் தாளம் போடுவது என்ருல், இதைக்காட்டிலும் வெட்கக்கேடான விஷயம் வேறு என்ன இருக்கிறது? கண்ணேத் துடைப்பது போலக் காகிதம் எழுதியிருக்கிருர். என்ன பிரயோசனம்? கோழையாக, பெண்ணுக்கு அடி மையாக, நினைத்த காரியத்தை நிறைவேற்றத் தைரியம் இல்லாத மனிதர்களெல்லாம் புருஷர்களென்று வேஷ்டி கட்டிக்கொண்டு வந்துவிடுகிருர்கள் !...”

இப்படி ஒவ்வொருவர் குண சித்திரத்தையும் அவன் மனம் அளவிட்டுக்கொண் டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/46&oldid=535287" இலிருந்து மீள்விக்கப்பட்டது