பக்கம்:அறுந்த தந்தி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அறுந்த தந்தி

இருந்தான்; அதற்கு மேலும் இருப்பான்.கதவைச் சாத்தி விடுவார்களே !

அறைக்குப் போனல் அவள் கடிதமும் அப்பாவின் கடிதமும் கண்ணிலே பட்டு இன்னும் வருத்தத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கும். ஆகையால் இப்படியே சுற்றிவிட்டு மெதுவாக அங்கே போகலாமென்று எண்ணி நடந்தே வரத் தொடங்கினன். செண்ட்ால் ஸ்டேஷன்” பக்கத்தில் வரும்போது, அங்கே பார்ஸல் அறையில் குமாஸ்தாவாக இருக்கும் அவன் ஆருயிர் நண்பன் சங்கரன் ஞாபகம் வந்தது. கணேசனுடைய மன இயல்பை நன்ருக உணர்ந்தவன் சங்கரன், அவனைப் போய்ப் பார்த்துப் பேசிக்கொண் டிருக்கலாம் என்று எண்ணி உள்ளே நுழைந்தான். அவன் நுழையும்போதே சங்கரன் ஒடி வந்து, அவன் கையைப் பிடித்துக் கொண்டு, என்ன பைத்தியமாக இருக்கிருயே! மணி ஆறரை அடித்துவிட்டது. உன்னுடைய அப்பா அனுப்பியிருக்கிற பார்ஸ்லை வாங்கிக்கொள்ளவில்லையே என்று நான் காத்துக்கொண் டிருக்கிறேன். இன்று காலை யிலேயே வந்துவிட்டது' என்று சொல்லி அவனைக் கூட்டிக் கொண்டுபோய் ஒரு நாற்காலியில் உட்கார வைத் தான். ஒரு பார்ஸ்லேக் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்துவிட்டு, எங்கே, ரெயில் ரசிதை எடு: என்ருன். கணேசன் அவனுக்குப் பதில் சொல்லாமலே அவசர அவசரமாக அந்தப் பார்ஸ்லேப் பிரித்தான். பிரமித்துப் போனன். மிகவும் அழகான பட்டுப் புடைவை ஒன்றும் ரவிக்கைத் துண்டு ஒன்றும் அதில் இருந்தன. என்ன இது!’ என்று ஆச்சரியம் தாங்காம்ல் வாய் விட்டுக் கூவி ன்ை. ஒரு கணத்தில் அவன் மனம் எப்படி எப்படியோ ஒடி ஒரு தீர்மானத்துக்கு வந்தது.

ஆம்! கடைசியில் அப்பா ஆண் பிள்ளையென்று காட்டிக்கொண்டுவிட்டார். மாட்டுப்பெண்ணுக்கு அழ கான புடைவை அனுப்பியிருக்கிருர். ரசீதும் கடிதமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/49&oldid=535290" இலிருந்து மீள்விக்கப்பட்டது