பக்கம்:அறுந்த தந்தி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேய்வச் சேயல் 45

புத்திசாலிப் பெண்ணுகிய லக்ஷ்மி இன்த விஷயத் தைத் தன் காதலனிடம் குறிப்பாகத் தெரிவித்தாள். வஷ்டிக்காகவும் பகAணத்துக்காகவுமா அவன் வங்தான்! 'அந்த வேஷ்டியே போதும். நான் இனிமேல் கதர்தான் கட்டிக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித் திருக்கிறேன். கல்யாணத்துக்கு வாங்கின பட்டுக்கரை வேஷ்டிகளைக்கூட யாருக்காவது கொடுத்துவிடப் போகி றேன். அப்படி இருக்க, இப்போது வேறு காசைக் கொட்டி எடுக்க வேண்டாம்” என்று அவன் சொன்ன வார்த்தை அமிர்தம்போல் விழுந்தது மாமனர் காதிலே.

ᏐᎦ 景 兴 응

கணேசன் தலைத் தீபாவளி அமோகமாக கடந்தது. கிரமமாக நடக்கிறபடி முன்கூட்டியே ஏற்பாடுகளுடன் எதிர்பார்த்து கடந்தால், இவ்வளவு சந்தோஷம் நிச்சய மாக இருக்க முடியாது. இப்போது அந்த இளம் தம்பதி கள் எந்த நிலையில் இருந்தார்கள் தெரியுமா? அதை வரு னிக்க மக்குச் சக்தி போகாது. சீதாபிராட்டி ராமபிரா லுடைய மோதிரத்தைப் பெற்றபோது அடைந்த சந்தோஷ நிலையை,

'இழந்தமணி புற்றரவு

எதிர்ந்ததென லானுள் குழந்தையை உயிர்த்தமல

டிக்குவமை கொண்டாள்.'

என்று பலவாறு கம்பர் வருணிக்கிருர். அதே நிலையில் இவர்கள் இருந்தார்கள் என்று சொல்லலாம். இந்த அபரிமிதமான சந்தோஷத்தில் கணேசன் இரண்டு நாள் அதிக லிவுக்குக்கூடக் கம்பெனி மானேஜருக்குக் கடிதம் எழுதிவிட்டான்.

அந்த நான்கு நாட்களும் அந்த வீடு சுவர்க்கலோக மாக இருந்தது. கணேசனும் லக்ஷ்மியும் இந்திரனும் இந்தி ராணியும்போல, மதனனும் சதியும் போல, கிருமாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/52&oldid=535293" இலிருந்து மீள்விக்கப்பட்டது