பக்கம்:அறுந்த தந்தி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி 49

மாளிகையில் ஆறு வேளை உண்னும் சீமாட்டிகளைப் போல அவள் இந்தக் குழந்தை வேண்டுமென்று தவமா கிடந்தாள்? இல்லை, யாரோ ஒரு பிச்சைக்காரன் தந்த பிரசாதம் அது. அவளும் மனித உணர்ச்சி உள்ளவள் தானே? வயிற்றுப் பதிக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்ருல் மற்றெரு பசியும், அவித்துவிடுமா? அவளுக்குக் கட்டின புருஷன் என்ற நியதியாக யாரும் இல்லை. அவ ளுக்குத் தகப்பனர் என்று குறிப்பிட்டுச் சொல்ல யாரும் இல்லாதபோது புருஷன் என்ற ஒருத்தனை மாத் திரம் வரையறுத்துக்கொள்ள வசதி ஏது? சமு தாயம் இந்தப் பரம்பரை உரிமையை அவர்களுக்கு விதித் திருக்கிறது. - - யாரோ ஒருவனுடன் சில நாள் இருந்தாள். அவனும் அவளும் பசி அடங்கினபோது வந்த ஏப்பம்போலக் குழந்தை பிறந்தது. அவளுக்கு எப்படி அப்பா என்று சுட்டிக்காட்ட ஒருவன் இல்லையோ, அப்படியே இந்தக் குழந்கைக்கும் இல்லை. காதல் புரிந்த பிச்சைக்காரன் ஒரு வார நேசத்தோடு போய்விட்டான். பிறகு அவளைப் பற்றி அவனுக்கோ, அவளை ப்பற்றி அவனுக்கோ கவலை

குழந்தை பிறந்த பிறகு அவள் தாயுணர்ச்சி இயற் கையிலேயே அவளைப் பற்றிக்கொண்டது. மாடமாளிகை களில் வாழும் நாகரிக நாரீமணிகள் தவம் செய்து குழந்தைகளைப் பெறுவார்கள். வேண்டாமல் வந்த குழந்தைகளையும் கண்ணில் ஒரு சொட்டு நீர் விடாமல் குப்பையை எறிவதுபோல, அழுக்கைக் கழிப்பதுபோலக் கழித்துவிடுவார்கள். அவளோ குழந்தைக்குத் தவம் செய்யவும் இல்லை ; பிறந்த பிறகு அதை எறியவும் இல்லை. வயிறு புடைத்துப்போய் அழுத வண்ணமாக இருக் தது குழந்தை. வயிறு புடைத்திருப்பதாகத் தோன் றியதே ஒழிய உண்மை வேறு. உடம்பு முழுவதும் எலும்பும் தோலுமாக ஒட்டியிருப்பதால் வயிறு மாத்தி

அறு. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/56&oldid=535297" இலிருந்து மீள்விக்கப்பட்டது