பக்கம்:அறுந்த தந்தி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி 5i

றைக்கோ ஒரு நாள் செய்தான். அதை வருஷங்தோறும் கொண்டாடுகிருர்கள். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் கிரிப்பும் உடையவனுக நடனமாடி ன்ை பெருமான்.

இப்போதும் அப்படியே ஆடுகிருன? கோயிலுக் குள்ளே அவனே க் கட்டிப் பொம்மைக் கோலஞ் செய்து சமந்து துபதீபம் காட்டி, ஹரஹா என்று கன்னத்தில் அடித்துக்கொள்கிருர்களே, அந்தப் பக்தர்களுக்கு இன் னும் நடராஜப் பெருமான் ஆனந்த தாண்ட்வம் புரிகி முன் என்ற நிச்சயம் உண்டா

அதோ கோயில் வாசலிலே புண் அழுகும் உருவம் படைத்த பிண்டத்தை மடியிலே கிடத்திக்கொண்டு வயிற ஒட்டி வாயுலர்ந்த ஒரு பிச்சைக்காரி உட்கார்ந் திருக்கிருளே, அவளைக் கண்டும் ஆண்டவன் ஆனந்த தாண்டவம் புரிவான? உள்ளே தேவார திருவாசக முழக் கம்; பழமும் தேங்காயும் குவிகின்றன. வெளியிலே வெறும் எலும்புக் கூடுகள் இரண்டு கிடக்கின்றன.

தர்மப் பிரபுக்களே! காலணுக் கொடுங்களேன்' என்று தொண்டையின் அடியிலிருந்து தொனியை எழுப்பிக்கொண்டு அவள் கேட்கிருள். பாடத் தெரிந்த பர்தேசிகளும், கொட்டாப்புளி போலக் கொழுத்திருக் கும் சோம்பேறிகளும் அந்த யாசகத் திருவாசலில் போடும் சப்தத்தில் அவள் தொனி எங்கே கேட்கப் போகிறது ?

அவளுக்கு கடராஜ தரிசனம் வேண்டாமா? வேண் டாம் ; ஒரு காலணு விழுந்தால் போதும். ஒரு முறை கைலாசம் போன இன்பம் உண்டாகும் அவளுக்கு.

குழந்தை துரங்கிக்கொண் டிருக்கது; களைத்துப் போய் மயக்கம் போட்டிருக்கலாம். அதைக் கவனிக்க டாக்டாா வரப்போகிருச்? பிச்சைக்காரி ஆகாசத்தைப் பார்த்துக்கொண் டிருந்தாள். யோசனை ஒன்றும் செய்ய வில்லை. நாளைக்கு இன்ன முயற்சி செய்யவேண்டுமென்ற திட்டம் இருந்தால்தானே யோசனை எழும்? வானம் சுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/58&oldid=535299" இலிருந்து மீள்விக்கப்பட்டது