பக்கம்:அறுந்த தந்தி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி 53

மான ஆடை வகைகள் உண்டு என்பதைக் காணவேண்டுமா ல்ை, கடைகளுக்குப் போகவேண்டாம்; இந்த இடத்தில் அரை மணி உட்கார்ந்து பார்த்தால் போதும். சினிமாச் சுருள் ஒடுவதுபோல உங்கள் கண்முன் நாகரிக ஆடைகள் ஒடிக்கொண்டிருக்கும். இந்தியாவிலே பஞ்சமென்ற யார் சான்னர்கள்? இந்த ரவலிகர்களுடைய கூட்டத்தைப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்லும் பைத்தியக்காரர்களும் இருப்பார்களா? ஆடைக்கும் ஆபரணத்துக்கும் நடமாடும் காட்சிச் சாலையாக இருக்கும் எத்தனே வனிதா ரத்தினங் களைப் பார்க்கிருேம் ! சிரிப்பும் கோலாகலமும் குது கலமும் நிரம்பின பெரிய மனிதர்கள் எத்தனே பேர் காட்சி அளிக் கிருர்கள்! கலையுலகத்தை நிறுத்துப் பார்க்கும் இளைஞர் கள் எத்தனை பேர் அங்கே வருகிருர்கள்! இந்திர லோகத் தில் இந்தக் காட்சி உண்டா?

அங்கேதான் அவள் வழி ஒாத்திலே கின்றுகொண் டிருந்தாள். பிறகு உட்கார்ந்து கொண்டாள். ஆடை, அணி, சோறு, சுகம், சிரிப்பு, உற்சாகம் என்பவைகளுக்கு அப்பாற்பட்டவள் அவள். மடியிலே கிடக்கும் எலும்புக் கூட்டின் அழுகைச் சங்கீதர்தான் அவளுக்குத் தெரியும். ாவலிகர்கள் கூட்டத்துக்கும் அவளுக்கும் எந்த விதத்திலும் சம்பக்கமே இல்லை. ஆனலும் ரவலிகர்களின் ஆடை அணி களின் பெருமையை அளக்க அவள் அளவுகோலாக உத வுவாள்.

கச்சேரி ஆரம்பிப்பதற்குமுன் இடம் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற வேகத்தில் எல்லோரும் போய்க்கொண் டிருக்கிருர்கள். சபைக்கு உள்ளே மேடை யின்மேல் கலையானது தர்மத்துக்கு அஸ்திவாாம் போடப் போகிறது. கலாாவலிகர்கள் தர்மத்தைக் காப்பாற்றுவதற் காக வேகமாகப் போகிரு.ர்கள். அவர்கள் கண்களில் பிச்சைக்காரி விழுவதென்பது சாத்தியமா? அவ்வளவு தூரத்துக்கு அவர்கள் கலைக்கண்கள் கெட்டுப் போய் விடுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/60&oldid=535301" இலிருந்து மீள்விக்கப்பட்டது