பக்கம்:அறுந்த தந்தி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - அறுந்த தந்தி

'டிக்கெட் விலை ஐந்து ரூபாய்; அதை வாங்க ஒரு

ரூபாய் லஞ்சம் கொடுத்தேன்’ என்கிருன் ஒருவன்.

'எங்கள் விட்டுக்கு நாலு டிக்கெட்டுகள் வந்தன. நான் ஒருத்திதான் வந்தேன். வேறே யாருக்கும் மற்ற டிக் கெட்டுகளைக் கொடுக்கக் கூடாதென்று அப்பா சொல்லி விட்டார். இலவசமாக யாரும் இன்றைக்குப் போகக் கூடாதாம்! தர்மகாரியம் அல்லவா?’ என்பது ஒரு மட மங்கையின் குயிலனய குரல். -

இளம் சிறுவன் ஒருவன் சொல்லுகிருன்: 'சித்தி, அதோ பார். அந்தப் பிச்சைக்காரி சாப்பிட்டு ஒரு மாசம் ஆகியிருக்கும்ப்ோல இருக்கிறதே!”

"சரிதாண்டா, பைத்தியம்! இந்த அவலக்ஷணத்தை யெல்லாம் பார்க்கத்தான் வந்தாயா? வா வேகமாக, கச்சேரி ஆரம்பித்துவிடுவார்கள்." - இப்படி அவனே அதட்டி இழுத்துச் சென்ருள் அந்தப் பெண்மணி.

அவன் நகரவில்லை. இதோ வருகிறேன்” என்று நழுவினன். அவள், 'நீ எக்கேடு கெட்டால் என்ன? நான் போகிறேன்' என்று போய்விட்டாள்.

- பிச்சைக்காரிக்கு இன்றும் ஒர் அணுக் கிடைத்தது. நிமிர்ந்து பார்த்தாள் ; திருவாதிசையில் அணுவைப் போட்ட அதே பையன். 'சாமி..... ' மேலே ஒன்றும்

அவன் காதில் விழவில்லை; போய்விட்டான்.

3

அவர்கள் கட்பு வளர்ந்து வந்தது. நட்பு என்று சொல்வது பொருத்தமாக இல்லை. இருவரும் ஒரு கிலே யில் இருப்பவர்கள் அல்லவே! அவன் அவளிடம் இரக்கம் காட்டி ன்ை; தன்னை அறியாமலே இாங்கின்ை. "இந்தா அம்மே; எங்கள் பள்ளிக்கூடத்துக்குத் தினம் மத்தியான்னம் ஒரு மணிக்கு வா. உனக்குக் காசு தருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/61&oldid=535302" இலிருந்து மீள்விக்கப்பட்டது