பக்கம்:அறுந்த தந்தி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அறுந்த தந்தி

அதன் நிழலிலே எங்கோ பிறந்து காற்றையும் வெயிலேயும் தோழர்களாகப் பெற்ற பிச்சைக்காரிக்கும் மாளிகையின் நிழலிலே வளரும் கோபாலனுக்கும் இடையே ஒரு வகை யான பாசம் இறுகிவந்தது.

அந்த வேளையில் எல்லாப் பிள்ளைகளும் கடலையும் மாம்பழமும் வாங்கித் தின்றுகொண் டிருக்க அவன்மட் ம்ெ பிச்சைக்காரிக்கு அணுவைக் கொடுத்துவிட்டுப் பேசிக் கொண்டிருப்பதென்ருல் அது விநோதமல்லவா? அதுவும் ஒரு நாளைப்போலவே தினந்தோறும் இது நடந்து வரு கிறது. மற்றப் பையன்களுக்கு இது பெரிய வேடிக்கையாகி விட்டது. என்னப்பா, அந்தப் பிச்சைக்காரி யாாப்பா? உனக்கும் அவளுக்கும் என்ன சொந்தம்? எதற்காக அவளுக்குப் பணம் கொடுக்கிருய்?” என்று ஒரு பையன் கேட்டான்.

"சொந்தக்காரர்களுக்குத்தான் உபகாரம் செய்ய வேனுமா? பாவம் பிச்சைக்காரி! கஷ்டப்படுகிருள். அதற்காகக் கொடுக்கிறேன்” என்பான் கோபாலன். எத்தனையோ பிச்சைக்காரர்கள் இருக்கும்போது இவளுக்கு மாத்திரம் கொடுப்பானேன்?”

'இவள்தான் தினமும் வருகிருள்.' 'இவள் எதற்காக வருகிருள் ?? கான் கொடுக்கிறதஞலே.” 'நீ எதற்காகக் கொடுக்கிருய்?” இந்தக் கேள்வியும் பதிலும் மாறி மாறி முடிவடை யாமலே நீளும். ஒரு பையன் கிண்டலாகப் பேச்வான். மற்ருெருவன் கோபம் வரும்படி பேசுவான்.

அந்தப் பிச்சைக்காரியிடம் எதற்காக அவனுக்கு నీ శిr பற்று? அவளுக்கும் அவனுக்கும் என்ன் தொடர்பு? அவனுக்கே விளங்காத கேள்விகள் இவை. ஆனல் அவளுக்கு இரண்டணுக் கொடுப்பதல்ை அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/63&oldid=535304" இலிருந்து மீள்விக்கப்பட்டது