பக்கம்:அறுந்த தந்தி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 • , அறுந்த தந்தி

'ஞாயிற்று க்கிழமை பள்ளிக்கூடம் இல்லையே ; அவள்

கஷ்டப்படுவாளே!' என்ற கவலைகூட அவனைப் பற்றியது. அதன் விளைவாகச் சனிக்கிழமையன்று அவளுக்கு கால

க் கிடைத்தது. இணு 卢 4.

விஷயம் பையன்களோடு கிற்கவில்லை. வாத்தியார் கள் காதுக்கும் எட்டியது. அவர்கள், பைத்தியம்!’ என்று தான் அவனை மதித்தார்கள். கோபாலன் வீட்டுக்கும் இந்தத் தர்மச் செய்தி சென்றது. பக்கத்து வீட்டுப் பையன் இந்த அதிசயத்தைத் தன் பாட்டியிடம் சொன்னன். அவள் கோபாலனுடைய சிறிய தாயின் காதில் போட்டாள். அந்த அம்மாள் கிருஷ்ணமூர்த்தி ஐய ரின் இரண்டாங் காரம் ; கோபாலனுக்கு மாற்ருந்தாய்.

நெருப்புப் பற்றிக்கொண்டது. 'உங்கள் அருமைப் பிள்ளையைப் பார்த்தீர்களா? பிறக்கிறபோதே தர்மப்பிரபு ஆகிவிட்டான். நோட்டுக்கென்றும் புத்தகத்துக்கென்றும் வாங்கிக்கொண்டு போகிற காசை யாரோ பிச்சைக்காரிக் குக் கொடுக்கிருளும்!” என்ற அறிக்கையில் ஆரம்பித்தது போர்.

கிருஷ்ணமூர்த்தி ஐயர் முதலில் நம்பவில்லை. பிறகு உண்மையை உணர்ந்தார். அவர் தர்மபுத்தி உள்ளவரே; அன்னதான சமாஜத்துக் காரியதரிசி. ஆளுல் என்ன ? தினந்தோறும் தர்மம் செய்ய முடியுமா? பிச்சைக்காரிக்கு கிரந்தரமாகச் சம்பளம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவல்லவா இருக்கிறது அவன் செய்கிற காரியம்? அவனுக்குச் சம் பளம் வேறு, அவளுக்குச் சம்பளம் வேரு? இதென்ன பைத்தியக்காரத்தனம்? பைத்தியக்காரத்தனமா? மடத் தனம். மடத்தனமா? அதிகப்பிரசங்கித்தனம்; அயோக் கியத்தனம்; திருட்டுத்தனம்! அவர் விமரிசனம் ஆல மரம்போல விழுது மேல் விழுது விட்டுப் படர்ந்தது.

அவனைக் கேட்டார். அவன் சாக்குப் போக்குச் சொன்னன். நீங்கள் கொடுக்கிற காசுக்கு நான் ஒன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/65&oldid=535306" இலிருந்து மீள்விக்கப்பட்டது