பக்கம்:அறுந்த தந்தி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அறுந்த தந்தி

காசு கொடுத்துவரவேண்டும். இதற்கு என்ன செய்வது? வீட்டிலிருந்து பணத்தைத் திருடலாமா? இந்த நினைவு வந்தபோது அவன் உடம்பு நடுங்கியது. கூடவே கூடாது' என்று தீர்மானம் செய்துகொண்டான். வேறு இடங்களில் கிருடுவதைப்பற்றிய எண்ணமே அவன் உள்ளத்தில் எழவில்லை.

இந்தச் சமயத்தில்தான் அவனுக்கு ஒரு புதிய உல கம் கென் பட்டது. ஒரு நாள் தன் தகப்பனுருடன் புரச வாக்கம் போயிருந்தான். பஸ் ஸ்டாண்டில் ஐயங்கார்ப் பையன் ஒருவன் நின்றுகொண் டிருந்தான். 'ஸார், எனக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லை ளார். ஏதாவது கொடுங்கள்’’ என்று பஸ்வலிலிருந்து இறங்கின. கிருஷ்ண மூர்த்தி ஐயரைக் கேட்டான். அவர் அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே காலணுவை எடுத்துக் கொடுத்துவிட்டு நடந்தார். போகும்போது, 'பாவம்! பையனேப் பார்த்தால் சுறுசுறுப்பாக இருக்கிருன். படிக்க வைத்தால் நன்முகப் படிப்பானென்று தெரிகிறது. ஏழை வீட்டிலே பிறந்திருக்கிருன்' என்று தம் அதுதாபத்தை வெளியிட்டார்.

இந்தச் சம்பவம் கோபாலன் உள்ளத்திலே பதிந்தது. சுத்தமாகத் தலையை வாரிக்கொண் டிருந்தான் அந்தப் பையன்; நெற்றியில் திருமண் தரித்திருந்தான். அவன் முகத்தைப் பார்த்து காலணுக் கொடுத்தார் தகப்பனர். ஏழைப் பிச்சைக்காானுக இருந்தால் காலணுக் காசு போட்டிருப்பாாா என்பது சந்தேகம். பையன் கேட்ட தும் பிச்சைதான் ; பிச்சைக்காரன் கேட்பதும் பிச்சை தான். ஆனல் இருவருக்கும் இடையே எத்தனே வித்தி யாசம் !

அவன் சிந்தனே எங்கெங்கோ ஒடியது. ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வர்தான். அவன் முகம் மலர்ந்தது. தீர்க்க முடியாத சங்கடம் ஒன்றைத் தீர்க்கும் வழி கண்டு பிடித்தவனைப்போலப் பெருமூச்சு விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/67&oldid=535308" இலிருந்து மீள்விக்கப்பட்டது