பக்கம்:அறுந்த தந்தி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி 6l.

5 - 'காளைக்கு என் சிநேகிதன் விட்டுக்குப் போய்ப் பாடம் படிக்கப் போகிறேன். கணக்கில் எனக்குப் டோகாது. அவன் கெட்டிக்காரன். ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அவன் வீட்டுக்குப் போய்ப் படித்து விட்டு வருகிறேன்’ என்று நயமாகத் தகப்பனரிடம் சொன்னன் கோபாலன்.

தம் பையன் பிச்சைக்காரியை மறந்துவிட்டதாக அவருக்கு ஞாபகம். நல்ல பிள்ளையாகிக்கொண்டு வரு கிருனென்ற சந்தோஷத்தில் அநுமதி கொடுத்துவிட்டார். அவனே அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண் டான். புரசவாக்கத்தில் அந்த ஐயங்கார்ப் பையன் செய்த காரியத்தை அவனும் செய்யத் தொடங்கினன். மயிலாப்பூரிலேயே செய்தால் அப்பாவுக்குத் தெரிந்து போய்விடும் ; ஆகையால் திருவல்லிக்கேணிக்குப் போளுன். அது அவன் கினைத்தபடி அவ்வளவு சுலபமான காரிய மாக இருக்கவில்லை. யாசகம் பண்ணும் துணிவு அவனுக்கு வரவில்லை. நாக்கு எழும்பமாட்டேன் என்கிறது. உடல் வேர்க்கிறது.

பஸ் கிறுத்தத்தில் கின்றுகொண்டான். சிறிது நோம் வெறுமனே வருபவர்களையும் போகிறவர்களையும் பார்த் துக்கொண்டே கின்ருன். யாரைக் கேட்பது? யாரைக் கேட்காமல் இருப்பது? என்ன கேட்பது? சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை' என்று தான் கேட்கவேண்டும். இந்த யோசனையில் நெடுநேரம் ஆழ்ந்திருந்தான்.

துணிவை அதிகமாக்கிக் கொண்டான். பஸ்வலி லிருந்து இறங்கினவர்களைப் பார்த்துக்கொண்டு கிற்பதை விட்டுவிட்டு ஒருவரை அணுகினன். அவருக்குப் பக்கத் தில் போனதுதான்; மேலே வாய் எழும்பவில்லை. பேசாமல் கின் முன். அவர் தம் பாட்டில் போய்விட்டார். இது இரண்டாவது கட்டம். மூன்ருவது கட்டத்தையும் துணிவாக அணுகினன் ; முயன்ருன்; வென்முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/68&oldid=535309" இலிருந்து மீள்விக்கப்பட்டது