பக்கம்:அறுந்த தந்தி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iy

போவதில்லை. வேண்டாம் என்று சொல்லும் சில ருக்காக அதன் வேகம் குறையவும் குறையாது. 'சிறுகதை மாத்திரம் போதுமா? மற்றத் துறை களில் நவீன இலக்கியம் முன்னேற வேண்டாமா?” என்று கேட்பவர் ஒரு சாரார். அவர்கள் கேள்வியில் ஒரு விதமான ஆர்வம் இருக்கிறது. மற்றத் துறைகளி லும் முயற்சி தீவிரப்பட வேண்டும் என்று வற்புறுத் திச் சொல்லட்டும். அதை வரவேற்போம். அப்படி யின்றி, இப்போது உண்டாகியிருக்கும் சிறுகதை ஊக்கத்தைக் கண்டு கசந்து, 'சிறுகதை வேண்டாம்" என்று காதைப் பொத்திக்கொள்வதற்குக் காரணம் தமிழன்பாக இருக்க முடியாது.

சிறுகதைகள் எழுதுவதில் உற்சாகங் கொண்ட பெருங்கூட்டத்தில் கானும் ஒருவகை இருக்க ஆசைப் பட்டேன்; சிறந்த சிறுகதைகளே எழுதவேண்டும் என்ற ஆசை இன்னும் என்னே விட்டபாடில்லை. எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

என் கதைத் தொகுதிகளில் இது மூன்ருவது. இதில் பலவகைக் கதைகளும் இருக்கின்றன. எல்லாக் கதைகளும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆல்ை ஒன்றுமே பிடிக்கவில்லே என்று சொல்லும் கிலே இந்தத் தொகுதிக்கு வராது என்ற தைரியம் எனக்கு உண்டு.

24-9-47. கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/7&oldid=535247" இலிருந்து மீள்விக்கப்பட்டது