பக்கம்:அறுந்த தந்தி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி - 65

வார்த்தைகள் அவர் காதில் விழுந்தபோது அவருக்கு ஆத்திரம் வந்தது. இப்போது, பழைய ஞாபகங்களை வைத்துக்கொண்டு பார்க்கும்போது, அவருக்கு வேறு வித மான எண்ணங்கள் எழுந்தன. அந்த விஷயத்தில் அவர் பணம் உபயோகப்படவில்லையே! அந்த மட்டில் அவர் ஏழைதானே?

அவர் அன்னதான சமாஜக் காரியதரிசி. அதாவது பலரிடம் பணம் கேட்டுச் சேர்த்துத் தர்மம் பண்ணுகிரு.ர். அவன் செய்வதும் அதுதானே ? அவர் ரசீது, கணக்குப் புத்தகம், சட்டை, தலைப்பாகை இவைகளுடன் சந்தா, நன்கொடை என்ற பெயரோடு யாசகம் செய்கிரு.ர். அவன் நேரடியாக யாசகம் செய்கிருன். அவர் யாசகம் செய்து பிச்சைக்காரர்களுக்குச் சோறு போடுகிருர். அவன் யாச கம் செய்து பிச்சைக்காரிக்குக் கொடுக்கிருன். பிச்சைக் காரிக்காக அவன் பிச்சைக்காரனுக இருக்கிருன்.

அவர் அவனுக்கு வேண்டியதைக் கொடுத்திருந்தால், அவன் செய்வது தர்மம் என்ற உண்மை உணர்ச்சியோடு அவனுக்குத் தடை போடாமல் இருந்திருந்தால்...... o

வண்டி போகிற வேகத்தில் அவர் மனம் யோகித்துக் கொண்டிருக்கது. தாம் செய்தது தவற என்ற ஞாபகம் தலை காட்டியது. பிச்சையெடுத்தாவது தர்மம் செய்ய வேண்டும் என்ற சங்கற்பத்தின் உயர்வு சிறிது சிறிதாகப் புலப்பட்டது. அவனேக் கண்டித்தது தவறு என்ற முடி வுக்கு வந்தார்.

வெளியூரில் இரண்டு நாள் இருந்து வேலையை முடித் துக்கொண்டு மயிலாப்பூருக்கு வந்தார். வீட்டுக்குள் துழைந்தார்; கோபாலன் பிச்சையேற்கும் தொழிலே மாற்றவேண்டுமென்ற தீர்மானத்தோடு நுழைந்தார். விட்டில் கோபாலன் ஜ வேகத்தால் பிதற்றிக்கொண் டிருந்தான்.

'அம்மாதான், அப்பா; என் அம்மா; அடிக்காதே. நான் அவளோடே போய்விடுகிறேன்; உன் பிள்ளை பிச்சை

அ.மு. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/72&oldid=535313" இலிருந்து மீள்விக்கப்பட்டது