பக்கம்:அறுந்த தந்தி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அறுந்த தந்தி

யெடுக்கக் கூடாது. அவள் பிள்ளையாக அவளோடே போகிறேன்.” - - - - இதைத்தான் குழறியும் இடையிலே விட்டு விட்டும் அவன் பிதற்றிஞன். . . .

அந்த வார்த்தையினூடே உள்ள கருத்தின் ஆழம் அவருக்குத் தெளிவாகப் புலப்பட்டது. அவர் உள்ளம் கரைக்த்து ; கண் கலங்கியது. படுக்கைக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்தார். கோபாலா!' என்ற் தாக்குழறின படியே என்றும் இல்லாத ஆசையுடன் அவன் தலையைத் தடவிக் கொடுத்தார்.

வெளியிலே, சாமீ!’ என்ற துக்கங் கலந்த குரல் கேட்டது. வேலைக்காரன் யாரையோ அதட்டிக்கொண் டிருந்தான். 'அந்தப் பிள்ளையை இந்தப் பாவி கண்ணுலே ஒரு தடவை பார்க்கிறேன் சாமி, கபாலிதான் அந்தப் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும்' என்று மட்டும் அந்தக் குரல் கேட்டது.

ஆலமரத்துப் பிச்சைக்காரிதான்; அவனேக் காணுத தால் விஷயத்தைத் தெரிந்துகொண்டு வீடு தேடிக் கண்டு பிடித்து வந்திருக்கிருள். துக்கத்தோடு தன் சொந்தப் பிள்ளையைக் கானும் தாய்க்கு எத்தனே பரிவுண்டோ அத்தனே பரிவோடு வந்திருக்கிருள்.

கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவளை உள்ளே அழைத்து வரச் சொன்னர். 'சாமி, கோபாலு!' என்று துக்கத்தை அடக்க மாட்டாமல் அவள் கூவினுள். அங்கக் குரலேக் கேட்டுக் கோபாலன் கண்விழித்தான். e

'என் கண்ணே, இதோ அவள் வந்திருக்கிருள். அவ. க்கு நான் பணம் கொடுக்கிறேன். நீயே உன் கையால் கொடு. இனிமேல் உன் இஷ்டப்படியே அவளுக்கு எது வேண்டுமானுலும் கொடு’ என்று கண்ணிர் வழியக் கிருஷ்ணமூர்த்தி ஐயர் கூறினர்.

கோபாலன் முகத்தில் லேசாக ஒரு புன்னகை படர்ந்தது. - r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/73&oldid=535314" இலிருந்து மீள்விக்கப்பட்டது