பக்கம்:அறுந்த தந்தி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகை விளக்கு

'அம்மா இன்றைக்காவது அந்த விளக்கை வெளியில் எடுத்துத் தேய்த்து ஏற்றி வைக்கிறேன். நல்ல விளக்கைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, இந்த வெண்கல விளக்கையும் பித்தளை விளக்கையும் மண் அகல் விளக்கை யும் ஏற்றி வைக்கச் சொல்கிருயே. ஸ்வாமிக்கு முன்னுல் அங் த வெள்ளி விளக்கை ஏற்றி வைத்தால் எவ்வளவு பிர ósT.字LD Tみ இருக்கும்!” என்று சீதாலசஷ்மி தன்னுடைய அம்மாவைப் பார்த்துக் கொஞ்சலாகச் சொன்னுள்.

அவளுடைய தாய் தன் அருமை மகளின் கலே மயி ரைக் கோதித் தடவிக் கொடுத்தபடியே, நீ சொல்லுவது சரிதான். ஆலுைம் அந்த விளக்கைக் கண்டால் எனக்கு நல்ல ஞாபகங்களே உண்டாவதில்லை. என்றைக்கு அது இந்த வீட்டுக்கு வந்ததோ, அது முதல் நமக்குக் கஷ்ட காலந்தான். உன்னுடைய அப்பா அதை மிகவும் ஆவ லோடுதான் செய்தார். அதை ஒரு கார்த்திகையில் பூரீ ராம சந்திர மூர்த்திக்கு முன் ஏற்றி வைத்துப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அந்த விளக்கு உனக்கு அழகாக இருக்கலாம். எனக்கு அதைப் பார்த்தாலே பகீரென் கிறது’’ என்று சொன்னுள்.

சீதாலசஷ்மி விடவில்லை; அம்மா, அப்பா அவ்வ ளவு பிரியமாக அதைப் பண்ணச் சொன்னர் என்று சொல்கிருயே; இப்போது அதை ஏற்றி வைத்தால் அவ ருடைய ஆத்மாவுக்குத் திருப்தி அளிக்கும் அல்லவா? அவர் இருந்தபோது அதை ஏற்றி வைக்கவில்லையென்று சொல்கிருய். ஆனல் அதைப் பார்த்தால் சில தடவை ஏற்றி வைத்த விளக்குப் போலல்லவா தெரிகிறது? இன்று புதிதாக ஏற்றினுல்தானே, நீ பயப்படுவதற்கு கியாயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/74&oldid=535315" இலிருந்து மீள்விக்கப்பட்டது