பக்கம்:அறுந்த தந்தி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68) அறுந்த தந்தி உண்டு ? ஏற்கனவே பழகின விளக்கை ஏற்றி வைப்பதில் என்ன தோஷம் வந்துவிடும்?" என்றாள். அப்படி இல்லையடி அம்மா! அப்படி இல்லை. உன்னு டைய அப்பா, அதை இங்கே வைத்துவிட்டு, நான் வந்த பிறகு கார்த்திகைக்கு ஏற்றி வைக்கலாமென்று சொன் 'னார். அந்த விளக்கை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கவேண்டு மென்றும் சொன்னார். அவர் வரவும் இல்லை ; கார்த்தி கைக்கு ஏற்றவும் இல்லை. அதை எப்படி இப்போது ஏற்றி வைப்பது?” "அப்படியானால், அப்பா மறுபடியம் உயிரோடு வந் தால் தான் அதை ஏற்றி வைக்க வேணுமென்று சொல் கிறாய்? இது வெகு வேடிக்கையாக இருக்கிறதே!' ராமாயணம் 5மாயண சாஸ்திரிகள் வால்மீகி ராமா யணப் பிரசங்கத்திலே வல்லவர். அவருடை... பிரசங்கத் துக்கு அவர் வாக்கு வன்மை கவர்ச்சியை அளித்தது பெரிதல்ல; அவருடைய சாரீர சம்பத்தும் அதனுடன் சேர்ந்துகொண்டதனால் அவருடைய பிரசங்கம் குழந் தைகளையும் பாமரர்களையுங் கூடக் கவர்ந்தது. அழகான உருவம் ; தேஜசுடன் ஜொலிக்கும் முகம்; பட்டை பட் டையாக விபூதியைப் போட்டுக் கொண்டு சால்வையை உத் தரியமாக அணிந்து ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் படத் தின்முன் உட்கார்ந்து பிரசங்கத்தை ஆரம்பித்துவிட்டா பானால் சோனமாரியாகப் பொழிந்து தள்ளி விடுவார். சபை யோர்களுடைய அபிருசியைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி வியங்களைச் சொல்வதில் அவர் மகா சமர்த்தர், அவருக்குத் தமிழும் தெரியும், கம்பராமாயணம் பாடல் களை முக்கியமான கட்டங்களில் அவர் எடுத்துச் சொல்வ துண்டு . - படித்தவர்களுக்கு முன்னுக்கு வரும் வழியும் நாலு காசு சம்பாதிக்கும் தந்திரமும் அநேகமாகத் தெரிவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/75&oldid=1278229" இலிருந்து மீள்விக்கப்பட்டது