பக்கம்:அறுந்த தந்தி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அறுந்த தந்தி

குழந்தைக்கு ஒரு ஸம்ஸ்கிருத வாத்தியாரை ஏற் படுத்தி ஸம்ஸ்கிருக்ம் கற்பித்ததோடு சங்கீகமும் சொல் லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

- 翠 安 妾

5ாராயண சாஸ்திரிகள் புதுச்சேரியில் ராமாயணப் பிாசங்கம் நடத்திக்கொண் டிருந்தார். பணம் படைத்த பிரபுக்கள் பலர் அவரைத் தலையில் வைத்துத் தாங்கி வந் கார்கள். சீதா கல்யாண கட்டம் வந்தபோது அவர்கள் அவரை மிகவும் வற்புறத்தி ஊரிலிருந்து அவருடைய தர்ம பத்தினியையும் குழந்தையையும் வருவித்து, தம்பதி சமேதர்களாக இருக்கச் செய்து, பூஜை செய்து கொண் டாடிச் சம்மானங்களை வழங்கிஞர்கள். விசாலத்துக்கு அங்கே நடந்த உபசாரங்களைப் பார்த்தபோது ஏதோ கன வுலகத்தில் இருப்பதுபோல இருந்தது. தன்னுடைய கண வர் உலகத்தாரால் எவ்வளவு போற்றப்படுகிருர் என்பதை இதற்குமுன் ஒரளவு கண்டிருந்தாள். ஆனல் புதுச்சேரி யில் நடந்த வைபவங்களுக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. விசாலத்துக்குத் தன் கணவரே ராமசந்திர மூர்த்தியாகிவிட்டார். அதுகாறும் அவரைத் தன் காத அக்கு உரிய பொருளாக எண்ணி வந்தவள், அன்று முதல் தன் பக்திக்கு லட்சியமான தெய்வமாகவே எண்ண லானள். அவளை அறியாமலே அந்த எண்ணம் அவள் உள்ளத்தில் இடங்கொண்டது. சீதா கல்யாணம் ஆன பிறகு குழந்தையை அழைத்துக்கொண்டு விசாலம் ஊருக்கு வந்துவிட்டாள். பட்டாபிஷேகத்துக்கும் வா வேண்டுமென்று அழைப்பு வந்தது. சில அசந்தர்ப்பங் களால் அவள் போக முடியவில்லை.

புதுச்சேரியில் பிரபுக்கள் வழங்க வழங்க வாரிக் கொண்ட பொருள்களோடு நாராயண் சாஸ்திரிகள் ஊரில் வந்து இறங்கினர். அதுவரையில் அவர் அவ்வளவு சம் பாத்தியத்தை அடைந்ததில்லை. புதுச்சேரியில் மலிவாகக் டைத்த சாமான்களில் ஒன்று பாக்கி விடாமல் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/77&oldid=535317" இலிருந்து மீள்விக்கப்பட்டது