பக்கம்:அறுந்த தந்தி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுங்த தங்தி

1.

ராமபுத்திர சர்மா கர்நாடக சங்கீதக்கலைப் பயிற்சி பெற்று நல்ல தேர்ச்சியடைந்து சிறந்த வித்து வான்களுடைய கோஷ்டியில் ஒருவராக விளங்கினர். இளமையிலேயே இவ்வளவு துாரம் அவருக்குக் கியாதி உண்டானதற்கு முக்கியமான காரணம் அவர் பால் இருந்த குருப்க்திதான் என்று எல்லோரும் சொல்லிக் காள்வார்கள். சுக பாவம் நிரம்பிச் சொன்னபடி கேட் கும் சாரீரம். போன ஜன்மத்தில் ஈசுவரனுக்குக் குடங் குடமாகத் தேனபிஷேகம் செய்திருக்க வேண்டும்’ என்று குடு குடு கிழங்கள் பேசிக்கொள்ளும்.

எல்லாவற்றையும்விட அவரிடத்தில் ஒரு சிறப்பு இருந்தது. அவர் வெறும் சங்கீத வித்துவான் மாத்திரம் அல்ல; சாகித்தியத்திலும் வல்லவர். புதிய புதிய மெட்டுக் களில் அவர் தமிழில் இயற்றி வந்த கீர்த்தனங்கள் சங்கீத வித்துவான்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் ஒருங்கே இன் பத்தை உண்டாக்கின. தமிழ், வடமொழி, தெலுங்கு என்ற மூன்று மொழிகளிலும் அவருக்கு நல்ல ஞானம். தமிழிலே அவரைப் பண்டிதரென்று சொல்வதுதான் நியாயம். பழைய கீர்த்தனங்களை எதிரே வைத்துக் கொண்டு பதத்துக்குப் பதம் போட்டுக் கீர்த்தனமென்ற பெயரோடு ஜீவனற்ற பாட்டுக்களை இயற்றுபவர் அல்லர் அவர். தமிழ் மரபும் இசை மரபும் பிறழாத அமைப்பை

வருடைய கீர்த்தனங்களிலே காணலாம். பழைய கீர்த்த, னங்களில் இன்றியமையாத சிலவற்றின் மெட்டுக்களை மாத்தி ாம் பின்பற்றிச் சில உருப்படிகளைச் செய்தார். மற்றப்படி எல்லாம் புதிய புதிய வர்ணமெட்டுக்கள். அவர் அமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/8&oldid=535248" இலிருந்து மீள்விக்கப்பட்டது