பக்கம்:அறுந்த தந்தி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகை விளக்கு 79.

கிடக்கும் விளக்கின்மேல் செலுத்தினுள். அங்கத் துண்டு இாண்டையும் எடுத்தாள். ஆத்திரமெல்லாம் அடங்கின அந்த நிலையில் அவளுக்குப் பரிதாப உணர்ச்சி சிறிது உண்டாயிற்று. உள்ள்ே கொண்டுபோய் விளக்கு வெளிச் சத்தில் பார்த்தாள்.

'இதென்ன இது? இது வெள்ளியில்லேபோல் இருக்

கிறதே! வெண்கலமா !"

உற்று நோக்கினள். மேலே வெள்ளிமுலாம் கனமா கப் பூசின விளக்கு என்று தெரிந்தது. உள்ளே இருந்தது. வெண்கலமா? நன்முகப் பளிச்சிட்ட லோகமாகத் தெரிங் தது. ஒருவேளை தங்கமாக இருக்குமோ? அவளுக்கு உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது.

"புதுச்சேரி விளக்காயிற்றே! அவர் தந்திரமாகத் தங்கத்தில் விளக்குப் பண்ணிச் சுங்க அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்க இப்படிச் செய்தாரோ!'

சந்தேகம் பலப்பட்டது. சந்தேகம் எதற்கு? தன் தம்பிக்கு ஆள் விட்டு வருவித்து விஷயத்தைச் சொன்னுள். சந்தேகம் தீர்ந்தது. மகா சாமர்த்தியசாலியாகிய சாரா யண சாஸ்திரிகள் தங்கத்தால் விளக்குப் பண்ணி வெள்ளி முலாம் பூசியிருந்தார். அதில் லக்ஷ்மீகரம் இருக்கிற தென்று அவர் சொன்னதன் தாத்பர்யம் இப்போது தான் விசாலத்துக்குத் தெரிந்தது.

'புதையலே எடுக்க வேனுமானுல் பலியிட வேண்டும் என்பார்கள். இந்தப் புதையலுக்குச் சீதாலக்ஷ்மியின் மேலாக்குப் பலியாயிற்று. நல்ல வேளை! அதோடு நின்றது. எல்லாம் பூரீ ராமசந்திர மூர்த்தியின் சோதனை' என்று ஆறுதல் பெற்ருள் விசாலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/86&oldid=535325" இலிருந்து மீள்விக்கப்பட்டது