பக்கம்:அறுந்த தந்தி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளிப் புடைவை 81

வேத பாாாயணம், தேவரா பாராயணம், ஸ்வாமி எழுங் தருள்வது, அதில் கச்சேரி வகைகள் - இப்படியாகப் பிர மாதப்படும். ஸ்வாமி கிருவிதியில் எழுந்தருளுவதைக் காட்டிலும் தீபாவளிப் புடைவை கோயிலுக்குச் செல்லும் போது நடக்கிற விமரிசை இன்னும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வருஷமும் புதிய புடைவை ஒன்றை இதற் காகவே நெய்யச் செய்து அதைப் பெட்டியில் வைத்துப் பூஜை செய்து கோயிலுக்கு மேள தாளத்துடன் எடுத்துச் செல்வார்கள். அம்பிகைக்கு அபிஷேகாதிகள் நடைபெற்ற பிறகு அந்தப் புடைவையைச் சாத்துவார்கள்.

'தீபாவளிப் புடைவை உற்சவம்' என்பது வேறு எந்த ஊரிலும் இல்லை. குங்தனூருக்கு மாத்திரம் சொந்தம். பழனியப்ப முதலியார் தம் ஆயுளில் முக்கியமான நிகழ்ச்சி யாக அந்த உற்சவத்தை கடத்தி வருகிருர். அதில் அவ ருக்கு இருந்த பக்தி சிரத்தை வேறு எதிலும் இல்லை.

இவ்வளவு விசேஷமாக அவர் இந்தப் புது விதமான உற்சவத்தை ஆரம்பித்ததற்குக் காரணம் என்ன? அது ஒரு கதை.

景 沿

பழனியப்ப முதலியார் ஒரு தறிபோட்டு கடத்தி வந்த காலம் அது. குறிப்பிட்ட சில குடும்பங்களுக்குப் புடைவை கெய்து கொடுத்து அதில் வரும் லாபத்தைக் கொண்டு காலசேஆபம் செய்து வந்தார். அவருடைய மனைவி சுந்த ரம்மாள் மிகவும் பொறுமையும் சாமர்த்தியமும் உடைய வள். செட்டும் கட்டுமாகக் குடித்தனத்தை நடத்தி வர் தாள். குடித்தனம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. புருஷன், பெண்சாகி, முதலியாருடைய கிழட்டுத் தாய், ஒரு வேலைக்காரப் பையன் ஆகியவர்கள் அடங்கிய குடும்பம்

• [صلى الله عليه وسلم yتھی۔

முதலியாருக்கு வேலையிலே கண். காலே முதல் மாலை வரையில் உழைப்பார். வேலைக்காரனிடம் நன்முக வேல்

அறு. ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/88&oldid=535327" இலிருந்து மீள்விக்கப்பட்டது