பக்கம்:அறுந்த தந்தி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - அறுந்த தக்தி

வாங்குவார். அணுவளவு தவிடுமிகள் பிதிாவிட மனம்’ வராது. கோயிலோ குளமோ வேடிக்கையோ திரு விழாவோ ஒன்றும் அவருக்குத் தெரியாது. அந்த முப்பது வயசிலே அவருக்கு ஒன்றிலும் பற்றில்லாத விர்க்கியா வத்துவிட்டது? இல்லே, இல்லை; எப்படியாவது காசு சேர்க்க வேண்டுமென்ற தீவிர உறுதி அவர் உள்ளத்துள் இருந்தது.

அதை அவர் மனேவி உணராமல் போகவில்லை. ஆளுல் செய்யவேண்டிய சாங்கியங்களைக்கூடச் செய்யா மல் கருமித்தனம் பண்ணுவது அவளுக்குப் பிடிப்பதில்லை. தன் கருத்தை வற்புறுத்திச் சொல்வதற்கும் அவள் பிரியப் படுவதில்லை. புருஷனிடம் அவளுக்கு அவ்வளவு பக்தி.

காசு சிறுகச் சிறுகச் சேர்ந்துகொண்டு வந்தது. சேரச் சேர முதலியாரின் கருமித்தனமும் இறுகி வந்தது. அதற்கு முன்பு வயிற்றுக்குச் சாப்பிடும் விஷயத்தில் அவர் கொஞ்சக்தான் கணக்குப் பார்த்தார். இப்போது அதில்கூடச் செட்டுப் பண்ண ஆரம்பித்தார்.

வாய் திறந்து தனக்கு இன்னது வேண்டுமென்று கேட் கும் சுபாவம் சுங்காம்மாளிடம் இல்லை. அவள் மன்சுக்குள் ஆசை இல்லாமலா இருக்கும்? நாலு பெண்களைப் போல அவளும் உடுக்கவும் உண்ணவும் பூணவும் ஆசை வைக் கிறவள்தான். ஆனல் அங்க ஆசையை அடக்கப் பழகி யிருந்தாள். அதுதான் வித்தியாசம். -

அவளுடைய சக்திக்கு, அடக்கும் சக்திக்கு, மீறின சையாக ஒன்று வளர்த்துவந்தது; ஊராருக்கெல்லாம் சேலே செய்து கொடுக்கும் இவர் தீபாவளிக்கு மக்கு நல்ல சேலே ஒன்று கெய்து தருவதில்லை. இக் த வயசில் கட்டிப் பார்க்காமல் வேறு எப்போது கட்டிக்கொள்வது? கையில் வெண்ணெய் இருத்தும் கெய்க்கு ஆழும் கதையாக இருக் கிறது. இது’ என்று அவள் எண்ணினுள். -

ஏதோ ஒரு நாள் அவரோடு உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கையில், "இந்தத் தீபாவளிக்கு எனக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/89&oldid=535328" இலிருந்து மீள்விக்கப்பட்டது