பக்கம்:அறுந்த தந்தி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அறுந்த தந்தி

திருந்த சில முடுகுகள் அநாவசியமாக ஸ்வரங்களை இட்டு

ாப்பும் அவஸ்தைக்கு இடமில்லாமல் செய்தன.

சாஸ்திர அறிவு, சாரீரம், சாகித்திய சக்தி எல்லாம் பொருந்தியவர்களைக் காண்பது மிகவும் அரிதான இந்தக் காலத்தில் ராமபத்திர சர்மாவின் புகழ் பெருகி வந்தது ஆச் சரியம் அன்று. அவர் வீணையிலும் அபார சாமர்க்கியம் வாய்ந்தவர். சொல்லப்போனல், அவர் முதல் முதலில் கற்றுக்கொண்டது. வீணே தான். சிறந்த வீணே வித்துவா குவாரென்றுதான் அந்தக் காலத்தில் அவரை அறிந்தவர் கள் எண்ணினர்கள். ஆளுல் வீணையை மிஞ்சிவிட்டது அவர் சாரீரம். சாரீர விணையிலே அவர் சஞ்சாரம் செய்த போது அநாயாசமாக உதிரும் ரவைகளையும் கண் ணென்று வரும் ராகபாவங்களையும் கேட்டவர்கள் பிரமித்துப் போனர்கள்.

அவருடைய குருவைப்பற்றி நீங்கள் கேள்விப்பட் டிருக்கலாம். நாகபட்டினம் குருமூர்த்தி ஐயரைத்தான் சொல்கிறேன். போன தலைமுறையில் தஞ்சாவூர் ஜில்லா வில் அவருக்கு ஈடான வித்துவானே இல்லை. சங்கீதக் கச்சேரிகளில் தம் திறமையைக் காட்டிப் புகழ் பெற்ற் தைக் காட்டிலும் அதிகமாக அவர் கிலையான உபகாாங் களைச் செய்து கீர்த்தியை அடைந்தார். ஆம்; அவரிடம் சிகை சொல்லிக்கொண்டவர்களுக்குக் கணக்கு வழக் கில்லை. குறைந்த பசும் நூறு பேர்களுக்கு அவர் இசைப் பயிற்சியை உண்டாக்கி யிருக்கலாம். அவரவர்கள் அங் கங்கே தங்கள் தங்கள் அதிருஷ்டத்துக்கு ஏற்றப்டி ஜீவனம் செய்துகொண் டிருக்கிருர்கள். -

பெரிய மனிதர் வீட்டுக் குழந்தைகளுக்குக் காலையும் மாலையும் சங்கீத ட்யூஷன் சொல்லிக்கொடுத்து, முப் பகேர் நாற்பதோ சம்பாதிக்கிருரே அந்த முத்துக்கிருஷ் னையர் அவருடைய சிஷ்யாே. பிடில் வாத்தியத்திலே புகழ் வாய்ந்திருக்கிற பத்மநாப முதலியார் அவரிடம் தயார்ான வர். இப்படிப் பலபல கிலேயிலும் பலபல காத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/9&oldid=535249" இலிருந்து மீள்விக்கப்பட்டது