பக்கம்:அறுந்த தந்தி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளிப் புடைவை 83

புடைவை நெய்து தரமாட்டீர்களா?' என்று கேட்டுவிட் டாள். அவர் காதில் அது விழுந்ததுதான்.தாமதம். கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதை அடக்கிக்கொண்டார். 3ð) L–@ð) oli வியாபாரக்காரர்களுக்கு வாய்ப்பேச்சுச் சொல் லிக் கொடுக்கவா வேண்டும்? 'தான் இப்போதெல்லாம் மட்டமான புடைவை செய்வதில்லை. முன்னலே சொல்லி ச்சாரம் வாங்கியவர்களுக்கு வேண்டியவைகளைப் போட் டுக் கொடுக்கிறேன். அவைகளெல்லாம் நாற்பது ஐம்பது விலை உள்ளவை. உனக்கு நான் வேறு வாங்கித் தருகி றேன். உனக்காக நான் செய்யத் தொடங்கினல் வேறு ஒரு புடைவை போடுவது கின்ற லாபமும் போய்விடும். உனக்குப்புடைவைதானே வேண்டும்? இத்துத் தீபாவளிக்கு நம் குட்டையனிடம் ஒன்று வாங்கித் தருகிறேன்' என்ருர். அவளுக்கும் கோபந்தான் வந்தது. 'உங்கள் கையாலே நெய்த புடைவையைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதனுல்தான் நான் சொன் னேன். வேறு புடைவை வாங்கிக் கட்டிக்கொள்வதில் எனக்கு ஒன்றும் விசேஷம் தோன்றவில்லை’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னுள்.

'அதற்கென்ன ? எனக்கு வேலை இல்லாதபோது உனக்குத் தக்கபடி ஒன்று நெய்கிறேன். இப்போது உயர்ந்த நூல் வாங்கிப் பாவு போட்டிருக்கிறேன். அதை விட்டுவிட்டு மறுபடி உனக்காக ஒன்று போடுவதானுல் நாள் ஆகும் ; கைமேல் இருக்கிற வேலையும் கெட்டுப் போகும்; லாபமும் இல்லை. சரியான காலத்தில் நாலு காசு சம்பாதித்தால்தானே உண்டு? இது உனக்குத் தெரி யாதா? இப்படிச் சம்பாதிப்பதெல்லாம் யாருக்காக? உனக் கும் அதில் சொந்தம் இல்லையா? காளைக்கு நமக்குக் குழந்தை பிறந்தால் அதற்கு காலு காசு சேர்த்து வைத் த்ால்தானே ஊரில் மானமாகப் பிழைக்கலாம்?' .

குழந்தை பிறப்பதைப்பற்றிய பேச்சை அவர் ஆாம் பித்தவுடன் அவளுக்கு நாணம் வந்துவிட்டது; 'காளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/90&oldid=535329" இலிருந்து மீள்விக்கப்பட்டது