பக்கம்:அறுந்த தந்தி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அறுந்த தந்தி

சமாசாரத்தைப்பற்றி இப்போது என்ன ?' என்று சொல் லிக்கொண்டே அவள் அடுப்பங்கரைக்குப் போய்விட்டாள். முதலியாருக்கு இன்று ஒரு புதிய விஷயம் தெரிய வந்தது. அவர் மனேவியின் உள்ளத்தில் ஆசைப்பேய் பற்றிவிட்டது. இனிமேல் அதைச் சரியானபடி அடக்கி ளாவிட்டால் அவர் வியாபாரத்துக்கே ஹானி வந்து விடும். நாலு குடும்பங்களை அண்டி அவர்களுக்கு வேண்டிய புடைவைகளே நாணயமாகக் குறித்த காலத்தில் நெய்து கொடுத்துப் பிழைக்கும் பிழைப்புக்கும் கேடு வந்துவிடும். அவருடைய கனவெல்லாம் கலந்துவிடும்.

சுந்தாம்மாள் தீபாவளிக்குப் புடைவை கேட்டதி லிருந்து இவ்வளவு விளைவுகளை அவர் எதிர்பார்த்தார்.

爱 姜 용

தீபாவளி நெருங்கிக்கொண் டிருந்தது. சுந்தாம்மாள் மறுபடியும் தன் விருப்பத்தைச் சொன்னுள். இந்த வரு ஷம் நான் வாங்கித் தரும் புடைவையைக் கட்டிக்கொள். அடுத்த வருஷம் உனக்கு கிச்சயமாக ஒன்று செய்து கரு

றேன்' என்று சமாதானம் செய்தார்.

அடுத்த வருஷமும் வந்தது. சுத் தாம்மாள் வற் புறுத்த ஆரம்பித்தாள். முதலியார் சாக்குப்போக்குச் சொல்லியும் பலிக்கவில்லை. சரி என்று சொல்லி ஒரு புடைவை அவளுக்காக நெய்யத் தொடங்கினர். அவளுக்கு அகிருஷ்டம் இல்லை; அந்தப் புடைவையை யாரோ அதிக விலை கொடுத்து வாங்கிக்கொண்டு போய்விட்டார். மற் ருென்று நெய்யத் தொடங்கினர். அது முடிந்தவுடன் அவருக்கு ஆபத்தில் உதவி செய்யும் அயலூர்ப் பண்ணேக் காார் பிடிவாதமாக அதையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார். பழனியப்ப முதலியார் பிடிவாதம் காசுக்கு முன் ஒடிவிடும். அதிக விலை வரும்போது அதை இழந்துவிட அவருக்கு மனசு வாவில்லை. புடைவையைக் கொடுத்துவிட்டு விட்டுக்குள் நுழைந்தபோதுதான் அவர் மனசு கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/91&oldid=535330" இலிருந்து மீள்விக்கப்பட்டது