பக்கம்:அறுந்த தந்தி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அறுந்த தந்தி

கும்; அழகான குழந்தை பிறக்கும்’ என்றெல்லாம் அவர் உள்ளம் இன்பக் கனவுகளில் உலவிக்கொண் டிருந்தது.

புரட்டாசி மாதம் சுந்தரம்மாளின் தாய் வந்து அவளைத் தன் ஊருக்குக் கூட்டிக்கொண்டு போனுள். தீபாவளிக்கு வரவேண்டுமென்று மருமகனிடம் சொல்லிச் சென்ருள். இதுவும் ஒரு விதத்தில் நல்ல காரியத்தான். புடைவை யைப்பற்றி அவள் கேட்கவோ நாம் சமாதானம் சொல் லவோ இடமில்லாமல் இருக்கும். திடீரென்று தீபாவளிக்கு நாம் புடைவையோடு போய் கிற்போம்' என்று முதலியார் கினைத்தார்.

동 洛 妥

தீபாவளிப் புடைவை உருவாகிக்கொண் டிருந்தது. அப்போது அக்த ஊர்த் தேவஸ்தான தர்மகர்த்தா ஒரு நாள் அங்கே வந்தார். அந்தப் புடைவை நெசவில் இருந்தது. :பழனியப்பா, இது என்ன, மிகவும் அழகாக இருக்கி றதே! இது யாருக்காக அப்பா செய்கிருய்?’ என்று கேட் டார். தம் மனேவிக்கு என்று சொல்ல முதலியாருக்கு வெட்கம்; "சும்மாத்தான் நெய்கிறேன்' என்ருர்.

'அப்படியால்ை ஒரு காரியம் செய். நம்மூர்க் கோவில் அம்பிகைக்கு உற்சவ காலங்களில் சாத்த நல்ல புடைவை ஒன்றும் இல்லை. இந்தப் புடைவையை நெய்து கொடு. உண்டான விலையை வாங்கிக்கொள். புடைவை வெகு லசு, ணமாக இருக்கிறது. மனுவு சரீரத்திலே படத் தக்கதாகத் தோன்றவில்லை. கருணும்பிகைக்கு ஏற்றதாக இருக்கிறது. நீ கொடு. கருணும்பிகையின் கருணே உனக்குக் கிடைக் கும்' என்று தர்மகர்த்தா சொன்னர். அவர் ஆசையாகக் கேட்டார்; அன்பாகத்தான் பேசினர்.

ஆனல் முதலியார் காதில் நாராசம் புகுந்ததுபோல் இருந்தது. தெய்வ பக்தி அவருக்குக் கொஞ்சமேனும் இல்லை என்பது காரணமல்ல. தடை ஒன்றும் இல்லாமல் இந்த வருஷம் தம் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/93&oldid=535332" இலிருந்து மீள்விக்கப்பட்டது