பக்கம்:அறுந்த தந்தி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளிப் புடைவை 87

மென்ற சங்கற்பம் உடையவர் அல்லவா? அதற்குக் தடை யாக இந்த மனுஷன் எங்கேயடா வந்தான்?’ என்று அவர் நினைத்தார். அதுமட்டுமா? மனுஷ சரீரத்திலே படக் தக்கதாகத் தோன்றவில்லை’ என்று அந்த அப்பாவி மனு ஷர் சொன்னதைக் கேட்டபோது முதலியாருக்குச் சரிரென்றது. அவருக்கல்லவா தெரியும் அவர் மனேவி அடைந்த ஏமாற்றம்! கருணும்பிகை கருணே கிடக்கட்டும்; சுந்தரம்மாள் மனசல்லவா குளிரவேண்டும்?

தர்மகர்த்தாவுக்குப் பதில் சொல்ல வாயெடுத்தார். 'என் புடைவை கல்லைச் சுற்றத்தான் உபயோகப்படு மென்று நினைக்கிறீர்களோ?" என்று கேட்டுவிட்டார்.

தர்மகர்த்தாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது; அட பாவி! என்னடா, நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிருய்? தெய்வத்தைப் பழிக்கிருயே! கடவுள் கல்லா! உனக்குக் கொடுக்க இஷ்டம் இல்லாவிட்டால் இல்லை என்று சொல்லிவிடேன். * ஏன் தெய்வ அபராதத்துக்கு ஆளர கிருய்? உன் முகத்தில் விழிப்பது பாவம் !’’ என்று சொல்

லிக்கொண்டே அந்த முதியவர் வெளியேறினர்.

இந்தச் சண்டை முதலியார் உள்ளத்தைக் குழப்பி விட்டது. மனசுக்குள் என்னவோ தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது. எப்படியோ புடைவையை செய்து விட்டார்.

ஐப்பசி பிறந்தது. தீபாவளிக்குப் பத்து நாள் இருக் கும்போதே ஊரிலிருந்து ஆள் வந்தது; சுந்தரம்மாளுக்குப் பிரசவ வேதனே எடுத்துவிட்டதென்றும், முதல் பிரசவ மாகையால் கஷ்டமாக இருக்கிறதென்றும் செய்தி வந்தது. தீபாவளிப் புடைவையை எடுத்துக்கொண்டு முதலியார் மாமனா ஊருககு ஒடிஞா.

அவர் போனபோது சுந்தாம்மாள் பிரசவ வேதனை யினுல் துடித்துக்கொண் டிருந்தாள். மருத்துவச்சிகள் உத விக்கு வந்திருந்தார்கள். கஷ்டமான பிரசவம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/94&oldid=535333" இலிருந்து மீள்விக்கப்பட்டது