பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3



இனையாத வழிசொல்வன் இங்குள்ள
இக்கோவ ணம்நேரும் எடைதாவென
மனையோடு மகவோடு துலையேறி
நேர்செய்த அமர்நீதி மதியேத்துவாம்.

7. எறிபத்தி நாயனார்

★வடவால னடிபேணு சிவகாமி ஆண்டார்
மலர்க் கூடையை
அடலாகி நண்ணிப் பறிக்தெங்கு மேசிந்தி
அங்கேகு மவ்
★★வடனாக மகையட்ட அதிவீரர் அடியார்கள்
அவர் காவல் தங்
கடனாக விரகங்கொள் நெறிபேணும் எறிபத்தர்
கழலேத்துவாம்.

8. ஏனாதிநாத நாயனார்

திருநி றிடாத அதிசூரன் திருநீ றிட்டான் எனக்கண்டே
ஒருபோ ருடற்ரு துயிரிழந்த உண்மைப் பக்திச் சீராளன்
திருநி றேநற் சார்பாகுஞ் செல்வ மென்னச் சீராட்டும்
பெருநீர்க் குணத்தர் ஏனாதி நாதர் பெருமை பேசுவாம்.

9. கண்ணப்ப நாயனார்

தன்னன்பர் கண்ணிடத்தே சோரிவரக் காண்டலுமே

தரியா தேங்கி

என்னன்பே என்னுயிரே ! என்னிருகண் மணியேயோ !

என்றி ரங்கித்

★வட ஆலன் = கல்லால மாத்தின் கீழான்.
★★அடல் நாகம் = வலிய ஆனை
அ-2