உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

கமரிடைச் சிந்தக் கண்டரி வாளிற் றங்
கழுத்தரிய விடே லெனும் ஓசையால்
அமுது செய்வதைக் கண்ட அத்தாயனார்
அவர் பதத்தைக் கருத்தி லிருத்துவாம்.


13.ஆனாய நாயனார்

திசையோர் மெச்சுந் தீங்குழலின்
இசையே அரனுக் கினிதூட்டும்
நசை யானுயர் நற்கழலின்
மிசையே வீழ்ந்து விரும்புவமே.


14. மூர்த்தி நாயனார்

எங்குமே சந்தனக் குறடி லாமையால்
தங்கையே கட்டையாச் சாரத் தேய்த்தவர்
அங்கணன் 1 அருளா சாட்சி செய்தவர்
எங் 2 கணர் மூர்த்தியை என்றும் ஏத்துவாம்.


15.முருக நாயனார்

மங்குல் தவழ்புக லூரில் வர்த்த
மானீச் சுரத்துறை வள்ளலார்க்குக்
கொங்கவிழ் மாலை பலவகைய
குறிப்பறிந் தேபல கோலஞ் செய்தே
அங்கங் குளிர்ந்தவன், காழி வந்த
அண்ணல் சம்பந்தருக் குற்ற நண்பன்
பொங்கு திருமணச் சோதி புக்க
போதன் முருகனைப் போற்றுவமே.


1 அருள் = அருளிய (வினைத்தொகை)
2 கணார் = கண்ணார்.