பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
16. உருத்திர பசுபதி நாயனார்

நிருத்தனை நினைத்துளம் நீரில் நின்றே
அருத்தியொ டுருத்திரம் அது ஜெபஞ்செய்
உருத்திர பசுபதி ஒண் மலர்த்தாள்
கருத்தினி லிருத்தியே கை கொழுவாம்.

17. திருநாளைப் போவார் நாயனார்

கருநாசம் உறப்புன்கூர்ச் சிவற்கே தொண்டு
கருதிபல தொண்டியற்றித் தில்லை காணும்
ஒருநாளும் உண்டோ என் றுருகி நிற்க
உம்பர்பிரான் "எரிமூழ்கி வா" என் றேதத்
திருநாடி அங்ஙனமே எரியின் மூழ்கிச்
சிவமுநியின் திருவேடம் பொலிய வந்த
திருநாளைப் போவார்தம் திறமே பேசித்
தீராத வல்வினை நோய் தீர்ப்பா மன்றே.

18. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

வந்த அடியார்தம் அழுக்கேறு கந்தையை
வாங்கித் துவைத்து நன்றாய்
மாலைக்குள் தருவன்நான் தப்பா தெனச்சொல்லி
வாரியிற் றப்பு மப்போது
தந்தகா ரம்போல மேகங்கள் கூடியே
அடர்மழை விடாது பெய்ய
ஐயகோ ஐயா உடை எங்ஙனம் உலர்த்துவேன்
அபசார மே அடைந்தேன்
இங்த உயிர் மாய்ப்பனென் றங்குள்ள பாறையில்
எற்றுமொரு தலை தன்னையே