பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
21. குலச்சிறை நாயனார்

நங்கள் காழிமா ஞானனைக் கொண்டு
மங்கு தல்லிலா மாறன் நாட்டினில்
எங்குஞ் சைவமே இலகு மாறுசெய்
நங்கு லச்சிறை நாதற் போற்றுவாம்.

22. பெருமிழலைக் குறும்ப நாயனார்

★ஈடிலியெம் ஆரூரன் இணை கழலே
என்றும அன்பாய்
நாடியவன் மாகயிலை நண்ணுமுனம்
கயிலை வெற்பைக்
கூடியவர், மாயோகி, பெருமிழலைக்
குறும்பர் மேலாம்
நீடியலை நிதந் துதித்து நித்தத்வம்
பெறுவோம் நாமே.

23. காரைக்கால் அம்மையார்

அம்ம ! ஏதிந்தப் பெருஞ்சுவை மாம்பழம் !
தெய்வமே அவளென்று
மம்ம ரோடுநாயகனகன் றேசெல,
மண்ணுல கியல் விட்டே,
கம்மு லாம் * வட வனநடன் அடிநிழல்
களிக்குமெங் காரைக்கால்
அம்மையார் பதம் செம்மையாய் நித்தமும்
அன்புடன் அருச்சிப்பாம்.


  • இச் செய்யுளில் ஒவ்வோரடியிலும் ஈற்றுச் சீரை விட்டாலும் பாடல் பொருள் தரும்.
    *வடவனம் -ஆலங்காடு