பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9
24. அப்பூதி அடிகள்

பரசிவன் தாளிணை பற்றிய நாவுக்
கரசெனும் நாமத்தி லாழ்ந்தோர் பத்தி |
புரிசெய லான்திங்க ளூரனப் பூதி
இருசர ணேயெனக் கின்பம தாமே.

25. திருநீல நக்க நாயனார்

உற்றபே ரன்பாற் சிலந்தியை ஊதி
உன்மனை விலக்கிய ஒரிடம் அன்றி
மற்ற இடங்களிற் சிலம்பியின் கொப்புள்
வந்தது பாரென் றிறையவர் காட்டப்
பெற்ற திருவினர்; ஞானசம் பக்தர்
பேசும் புகழினர், அவர் திரு மணஞ்செய்
நற்றவர் ; ஜோதி கலக்கவர் ; நீல
நக்கரைப் போற்றிநந் துக்கங் களைவாம்.

26. நமிநந்தியடிகள் நாயனார்

எரிவல னேந்தும் நுந்தம்
ஈசர்க்கு நீர் சீர் கொண்டே
எரிவிள க் கேற்றும் என்ற
எக்கராம் அமணர் காண
எரியகல் நீர் கொண் டேத்தும்
எம்பிரான் 'தொண்ட ராணி'
விரிபுகழ் நம்பி நந்தி
விறல் நினைந் தன்பு செய்வாம்.