உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

28. ஏயர்கோன் கலிக்காம நாயனார்

மன்னவ ! விடைவரு மாதேவ !
★வழிவழி யடிமையன் கானன்றோ ?
★என்னிது ! புதிய ஒர் தொண்டனுற்றோ?
★ இப்பினி தீர்த்திடல் இதுநன்றோ ?
துன்னரும் உன்னையொர் பெண்பாலே
தூது விடுத்தவன் முகம் பாரேன்
என்னுமவ் வேயர்கோன் கலிக்காமர்
என்துணை யாவரே நாள் நாளும்.

29 திருமூல நாயனார்

ஆயனன் மெய்யில் ஆத்துயர் நீங்க
அடைவுற்றே
மாயிருள் நீக்கும் மந்திர மாலை
மறை நூல் மூ
வாயிரம் பாடல் ஆண்டிலுக் கொன்ராய்
அருள் மூலர்
தாயினும் நல்லர் என்னையும் ஆள்வர்
தயை கூர்ந்தே.

30. தண்டியடிகள் நாயனார்

கண்டு செய்யக் கண்ணி லாது
கயிறு தொட்டுக் குளந்தொடும்
தொண்டி கழ்ந்த சமணர் கண்கள்
கொலைய அஞ்சி அஞ்சியே


★ இந்த பாகத்துக்குப் பதிலாக
"வயலினில் நீரிலை நிலந்தருவேன்
என்ன மொழிந்து கிளந்தந்த
ஏற்ற நிறைந்த பெருந் தொண்டர்"-என்னும் பாடமும் ஆம்.
அ-3