இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நனைமென் மலரணி நாதன் அடியவர்
என்றே பணிவுறு நரசிங்க
முனையர் கழலடி அது என் தலைமிசை
சூடும் நறுமலர் முப்போதும்.
துதிபத்தி யோடு வலை வீசி வந்து
துதை மீனி லொன்று கயிலைக்
கதிபர்க்கி தாக எனவிட்ட நாளில்
நவரத்ன மீன மதுவே
பதிவுற்ற போது முசியாது மீனை
* அலைவிட்ட பண்பு நலமார்
அதிபத்த ரான அதிபத்தர் பாத
மதிபத்தி யோடு மடைவாம்.
இந்த ஓரடியர் முன்பு நம்பணி செய்
ஏவ லாளரென எண்ணியே
சிந்தை யோசனையில் அடியர் கால்கழுவ
சிறிது தன்மனைவி தாழ்த்தலும்
நொந்து தன்மனைவி கைதடித் தடியர் ,
கால் விளக்கியதுநு ணறிவினர்
எந்தை தூயர்கலிக் கம்பர்சீ ரடியை
என்று மேதொழுது வாழ்த்துவாம்.
* அலை = கடல்