இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏரெ லாநிறை தண்டமிழ்க் கோவையை இயற்றி
நேரெ லாநிறை வேங்கர்பாற் சொலிவரு நிதியைச்
சீரெ லாநிறை சிவபணிக் காக்கிய சீலர்
காரி யார்கழல் கருத்தினி லிருத்தியே களிப்பாம்.
அன்று காழியர் அண்ணல் நீற்றால்
நின்ற சீர்நெடு மாறன் நீடு
பொன்றி டாப்புகழ் போற்றி வாழ்வாம்.
தாயிலார் வாழவே சந்ததம் தம்மனம்
கோயிலாச் செய்தவர் குரைகழல் போற்றிநன்
நேயமே அமுதென நிவேதனஞ் செய்க அவ்
வாயிலார் நாயனார் வண்பகம் வாழ்த்துவாம்.
பொருதிற லில்லாதார் பொருட்டுவெம்
முனைசென்றே
மருவலர் தமைவென்று வருநிதி ,
களை யெல்லாம்
பரசிவ னடியார்தம் பாற்படுத்
"துந்திரலார் .
பெருவிறல் முனையடுவார் பெரும்புகழ்
பேசுவமே.