இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எந்தை பூவை எடுத்தாள் இவளென்று
வந்து சீறி மனையாள் கரத்தையே
சிந்த வெட்டுஞ் சீலர் கழற்சிங்கர்
எந்த நாளும் இருப்பர் எமதுளே.
கண்ணுதலான் அடியவர்க்காக் கவர்ந்தேன்
நும்நெல் என்னலுந் தம்
எண்ணில்பெரும் பண்டாரம் ஈசன்
அடியார் கொள்ளை கொள
கண்ணுக என்றே விடுத்த நல்லார்
எங்கள் இடங்கழியார்
அண்ணலவர் அன்பினுக்கே அடங்கா
மகிழ்ச்சி கொள்வோமால்.
★அண்டர் பிரானவர்த் தாழ்மலரை அங்கே
கண்டுடன் மோத்த அக் காரிகைதன் நல்ல
துண்ட மதையொரு துண்டமதா அன்றே
கண்ட செருந்துனை கால்பணிவம் நன்றே.
பஞ்சம துற்றிட வாடி ஒடுங்கிய மெய்யர்
படும் பசியால்
நஞ் சிவ னார்முடி மஞ்சன நீர்க்குடம் வீழ
நடுங்கிடலும்
* ஈற்றுச் சீரை அடிதோறும் விட்டாலும் பாடல் பொருள் தரும்.