இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அஞ்சுத லேனினிக் காசது நல்குவ னென்றா
னார் மொழிய
உஞ்ச புகழ்த்துணை யார்புக ழேசொலி உள்ளம்
உவந்திடுவாம்.
உங்துறு போரினில் நின்றிவண் மீளவும்
உற்றிடு மந்தவொர் நாள் வரையில்
எங்தை பிரானடி யாரவ ருண்ண
இருக்குமிந் நெற்குவை யீங்கெவரும்
சொந்தமா தாக எடுத்த லடாதெனும்
அவ்வுரை சோர எடுத்தவர்கள்
சிந்திட வாள்கொடு சிந்திய கோட்புலி
திண்ணிய பத்தியை எண்ணுவமே.
காசு கிடையாமை கண்டு சோர்வின்றி
நேச மனத்தின் கண் நிமலர்க் கொருகோயில்
ஆசை யதுகொண்டே அமைத்த நின்றவூர்ப்
பூச லார் பாத பூசை புரிவோமே.
திங்கள் சூடிய தேவின்
சிவநெறி தழைத்திட வேண்டி
எங்கள் சண்பையர் கோனால்
இருந்தமிழ் நாட்டினிற் சைவம்