இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொங்கு மாறருள் செய்த
புண்ணியப் பெண்ணினல் லாளாம்
நங்கை மங்கையர்க் கரசி
நளினமெல் லடிகளே போற்றி.
சாலியர் நற்குலம் வந்தவர் தம்மனம்
சங்கரர் தாளிணைக்கும்
வாலிய நன்னா திருவைந் கெழுத்துக்கும்
தங் கை மறையறியாச்
சூலி பணிக்குமங் காக்கிய சீலர்
சிவனடித் தொண்டருக்கே
ஏல உடைகோ வணங்கீள்நெய் தேதரு
நேசரை எத்துவமே.
முந்தைப் பிறப்பதனில் மொய்ம்பார்
சிலம்பி யாய்ப்பக்தர்
எந்தைக் கிழைக்கனன்நான் இந்தப்
பிறவி யிடர்தீர
வந்தே னெனமதித்து மாடக் கோயில்
பல செய்தே
சிங்தை யுகங்தவன் கோச் செங்கட் சோழன்
கழல் போற்றி.