பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது22

63. சுந்தரமூர்த்தி நாயனார்

சீரார் திருக்கயிலைச் செம்மலார் ஆடியின் முன்
வாரா யென அழைக்க வந்தவரார் ?-பேராரும்
பூங்கயிலை வெற்பிற் புனையிழையார் மேற்காதல்
தாங்க அதனால் தரணியிலே-பாங்கு பெறு
நாவலூர் வந்துதித்த நம்பர் யார் ? ஆதிசைவ
மேவு குலத்துவந்த மேன்மையர் யார் ?-பூவியக்கும்
ஆரூரர் என்ற பெய ராலழைக்கப் பட்டார் யார் ?
பேரூர் நரசிங்கர் பேணிகின்ற-சீரார் யார் ?
அந்த மணத்தில் அரனார் வலியவந்தே
இந்த மனப்பிள்ளை என்னடிமைச்-சொந்தமெனக்
கூறி ஆ ளாகக் கொளப்பட்டார் யாரே? பின்
எறூர்ந்தார் வன்றோண்டா ! என்றழைத்தே

-ஊறின்றிப்

பித்தா என் றென்நீ பேரிட் டழைத்ததனால்
'பித்தா' எனத் தொடங்கிப் பீடுபெற-வைத்தா
தரவுடனே பாடென்ன அங்கம் சிலிர்த்தங்
காவணிந்தார் தம்புகழை அன்று-பரவினர்?
தாணு உறையும் தலம்பரவச் செல்லூங்கால்
மாணுறு சித்தவ்ட மாமடத்தில்-பேணுதுயில்
கொள்ளும் பொழுது குணமிலிவந் தவ்விடத்தில்
உள்ளி மிதிக்க உயர்ந்தோர் யார் ?-வள்ளலெம
தாரூரர் தண்ணருளால் அம்மை பரவையை யன்
ருரூரி லேமணந்த அன்பர் யார் ?-சீரூருந்