பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

தொண்டத் தொகைபாடிச் சுத்த கெறிச்சைவம்
எண்டிக் கிலக இயற்றினர் யார் ?-குண்டையூர்
அன்றுவரு நெல்மலையை ஆரூரி வேவரச்செய்
வென்றிபெறு நோன்மையர் யார்? மெய்க் நிறைந்த

-நன்றிபுகல்

கோட்புலியார் நட்புக் குணத்துக் இனங்கிப்போய்
ஆட்பட்ட அன்னார் அருமை மக்கள் -வாட்பட்ட
கண்ணியச் சிங்கடியைக் கன்னி வனப்பகையை
எண்ணித்தம் மக்களா ஏன்றவர் யார் ?

-உண்மையுரை

பாவாற் செங் கற்கள் பசும் பொன்னா கக்கண்ட
கோவார்? பின் கூடலையாற்றூர்க்குப்-போவார்க்குக்
கூடலை யாற்றுார் குறுகு வழி காட்டியநல்
லாடல் செயப் பெற்றார் ஆரே? பின்-நாடு
பழமலையிற் பெற்ற பசும்பொன்னை ஆற்றில்
விழவிட்டே ஆரூரில் மேலா-எழக் குளத்தில்
பாடி வரப்பெற்ற பண்பாற் பரவையுளம்
நாடி மகிழ்விக்க நம்பர் யார்?-ஈடிலியே
தேடிப் பொதிசோறு திண்குருகா வூரருகிற்
கூடித் தரப்பெற்ற கோமான் யார் - வீடு தொறும்
கச்சூரி லேயரவக் கச்சையவன் பிச்சையெடுத்
திச்சை யுடனளிக்க ஏன்ற ஒரு-விச்சையர் யார் ?
-ஓணகாந் தன்தளியில் உம்பர்பிரா னைப்பாடிப்
பேணி நின்ற பொன்கொள் பெரியோர் யார் ? .

-தாணுமகிழ்