பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது24

ஒற்றியூர்ச் சங்கிலியை ஓர்மகிழ்க்கீழ் நன்மணஞ்செய் வெற்றி படைத்த விறலோர் யார்?-அற்றை நாள்

சொற்பிறழ்ந்த குற்றத்தாற் சோர்வுபடப் பார்வையிலாந் தற்பனெனை ஆண்ட அரசே நான்-சொற்பிறழ்ந்த

குற்றம் பொறுக்க என ஊன்றுவதோர் கோலருளப்
பெற்றபெருஞ் செல்வர்யார் ? போன்போ-டுற்றங்காக்

காஞ்சியிலே பா அணிந்து கண்ணணென்று பெற்றவர்யார்?
வாஞ்சையுடனே துருத்தி வன்பொய்கை-தாஞ்சேர்ந்து

மெய்யுற்ற நோய்விலகும் மேன்மை படைத்தவர் யார் ?
பொய்யற்றார் வாழாரூர் புக்குமற்றை-வையுற்ற

கண்பார்வை வேண்டியே காதல் வசை பாடிக்
கண்பார்வை பெற்றுக் களித்தவர் யார் ?--எண்பாவும்

அந்த பரவையிடம் ஐயரையே தாதனுப்புஞ்
சொந்தம் படைத்திட்ட தூயர் யார் ? - இங்தவகை

ஈசனைத் துாது விட்டார் யாரே! இவர் முகத்தை
நேசமுடன் நான்பாரேன் நிச்சயமென்-றேசின

ஏயர்கோன் தன்நட்பை ஈசன் திருவருளால்
எயும் வகைபெற்ற இன்பர் யார் ? -நேயமுடன்

நாடிவந்த சேரமான் நாயனார் நட்புற்ற
ஈடிலாச் செல்வர் யார் ? எற்றிவரும்-ஓடுநதி

அங்கே வழிவிடவே ஐயாறு கண்டோர் யார் ?
ஈங்கோமான் சேரமான் நல்கிய பென்-கொங்கேபோம்

ஆற்றிலே ஆறலைக்கப் பட்ட வுரும் பொருள்கள்
ஈற்றில் தரப்பெற்ற எந்தல் யார் ? -கூற்றில்