வருமுதலை யுண்ட மதலைவர வேண்டி
ஒரு முதலைப் பாடி உயிர்பெற்-றருமதலை
வந்திடவே செய்த தவ வள்ளல் யார்? வெண்களிற்றில்
எங்தை கயிலை யிடஞ்சேர்ந்தச-அந்தணர் யார் ?
தம்மைவிட் டிங்கே தரிசிக்க இயலாது
செம்மைப் பரியேறிச் சேரர்வர- அம்மையப்பர்
முன்னிலையில் மற்றவரை முன்னணயச் செய்தங்கு
முன்னிலையி லேயமர்ந்த மெய்ம்பர் யார் ?தன்னியமத்
தன்னவரே என் துணையும் அன்னவரே என்பொருளும்
அனனவரே என்னுடைய ஆருயிரும்-அன்னவரே
உண்மணியாய் நின்றென் உளத்தே ஒளிபெருக்குங்
கண்மணியாம் சுந்தரரே காண்.
தில்லைவா ழந்தணர் திருத்தாள் போற்றி
பொய்யடிமை யில்லாத புலவர்தாள் போற்றி
பக்தராய்ப் பணிகின்ற பண்பர் தாள் போற்றி
பரமனேயே பாடுகின்ற பான்மையர் தாள் போற்றி
சித்தம் சிவன் பாலே சேர்ப்பவர் காள் போற்றி
திருவாரூர்ப் பிறக்கார்கள் திருத்தாள்கள் போற்ற
முப்போதுக் திருமேனி தீண்டுவர் தாள் போற்றி
முழுநீறு பூசிய முநிவர் தாள் போற்றி
அப்பாலும் அடிச்சார்ந்த அடியர் தாள் போற்றி