பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30


அரிந்து முநிவருக்கு உதவிய பெருமான் மானக் கஞ்சாரது புகழை வாழ்த்துவாம்.

12. அரிவாட் டாய நாயனார்

பசியின் கொடுமையால் தள்ளாடி விழ, இறைவனுக்கு நிவேதனத்துக்காகத் தாம் எடுத்துச் சென்ற செங்கீரை, நெல், மாவடு முதலிய தமரில் விழுந்து சிந்தை கண்டு மனம் நொந்து அரிவாளினால் தமது கழுத்தை அரியும் போது இறைவன் 'விடேல்' என்னும் ஒசையோடு சிந்தின மாவடுவை அமுது செய்யக் கண்டு உகந்த (அரிவாள்) தாய நாயனாரது பதத்தைக் கருதுவாம்.

13. ஆனாய நாயனார்

யாவரும் மெச்சும் குழலின் இசையமுதை அரனுக்கு இனிதாக அன்புடன் ஊட்டின ஆனாய நாயனாரது கழல்களைப் பணிந்து விரும்புவாம்.

4. மூர்த்தி நாயனார்

சந்தனக் கட்டை எங்கும் கிடையாமையால் தமது கையையே கட்டையாக வைத்துத் தேய்த்தவரும், இறைவர் தமக்கு அளித்த அரசாட்சியை நடத்தினவருமான மூர்த்தி நாயனாரை ஏத்துவாம்.

15. முருக நாயனார்

திருப்புகலூர் வர்த்தமானிச் சுரத்துப் பெருமானுக்குப் பலவகை மாலைகளைச் சூட்டி, அலங்கரித்து மகிழ்ந்தவரும், சம்பந்தப் பெருமானுக்கு நண்பரும், அப்பெருமானது திருமணச் சோதியிற் கலந்தவருமான முருக நாயனாரைப் போற்றுவாம்.