பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32


வன் என்னும் பதவி முதலியவற்றை இறைவர் பால் பரி சாகப் பெற்ற சண்டேசுரக் குரிசிலை நினைந்து உய்வாம்.

20. திருநாவுக்கரசு நாயனார்

ஐந்தெழுத்தாகிய செப்பத்தைக் கொண்டு நீர்க் கடலையும் பிறவிக் கடலையும் கடந்து நின்றவரும், வஞ்சக நெஞ்சினராம் அமணரது சூழலை விட்டகன்று வந்த மாதவரும், வாசியிலாத காசு பெற்றவரும், மறைக் கதவத்தைத் திறக்கப் பாடினவரும், விடம் தீர்த்தவரும், கயிலைக் காட்சியைத் திருவையாற்றிற் பெற்றுக் களித்தவருமான உத்தமராம் அப்பரை நினைத்து உய்வாம்.

21. குலச்சிறை நாயனார்

சம்பந்தப் பெருமானது திருவருளாந் துணை கொண்டு பாண்டி நாட்டிற் சைவம் விளங்கச் செய்த நமது குலச்சிறை நாயனாரைப் போற்றுவாம்.

22. பெருமிழலைக் குறும்ப நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடித் துணையையே நாடி, அவர் கயிலையை அடையு முன்னரே தாம் கயிலையை அடைந்த யோகீசராம் பெருமிழலைக் குறும்பரது இயலை நினைந்து துதிப்பாம்.

23. காரைக்கால் அம்மையார்

"இஃதென்ன அற்புதம்! இந்த மாம்பழம் வியக் கத்தக்க சுவையுளதா யிருக்கின்றதே! இவள் ஒரு தெய்வம் தான்" என்று அஞ்சித் தமது கணவன் தம்மை விட்டகலத்,தாமும் உலகியலை உதறித், திருவாலங்