உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

காட்டிற் கூத்தப் பிரானது திருவடி நிழலில் நின்று களிக்கும் காரைக்கால் அம்மையாரது பாதங்களைச் செம்மையாய் நிதமும் அருச்சிப்பாம்.

24. அப்பூதி அடிகள் நாயனார்

சிவ பிரானது திருவடியைச் சிக்கெனப் பிடித்த திருநாவுக்கரசரது திரு நாமத்திலே மிகுந்த பக்தி பூண்ட திங்களூர் அப்பூதியாரின் பாதங்களே எனக்கு இன்பம் தருவனவாம்.

25. திரு நீலநக்க நாயனார்

'பேரன்பினால் உன் மனையாள் சிலந்தியை ஊதின அந்த ஓரிடம் தவிர மற்ற இடமெல்லாம் சிலந்தியால் வந்த கொப்புளத்தைப் பார்' என்று இறைவரே தமக்குக் காட்டப் பெற்றவரும், ஞான சம்பந்தப் பெருமானால் பாராட்டப் பெற்றவரும், அப் பெருமானது திருமணச் சடங்கை இயற்றி அங்குத் தோன்றிய ஜோதியிற் கலங்தவருமான நீல நக்கரைப் போற்றி நமது துக்கங்களைக் களைவாம்.

26. நமிநந்தி யடிகள் நாயனார்

"எரியேந்தும் உங்கள் இறைவனுக்கு நீர் ஊற்றி விளக்கேற்றும் நீர்" என்று பரிகசித்த அமணர் நாண நீரைக் கொண்டே விள்க்குகள் ஏற்றின பெருந் தொண்டராம் நமிநந்தியை நினைந்து அன்பு செய்வாம்.

27 திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்

காழியில் உதித்தவரும், கவுரி முலைப்பால் உண்டவரும், இசையும் தமிழும் விளங்கக் கவிகள் பொழிந்த