பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34


வரும், கல்லே தெப்பமாகக் கொண்ட பெரியாரை 'அப்பரே' என அழைத்தவரும், தாளம், சிவிகை, சின்னம், பந்தர் இவைகளை இறைவரே தரப் பெற்றவரும், பனிச்சுரம், முயலக நோய், விடம் இவைகளை ஒழித்தவரும், பதிகம் பாடிக் காசு பெற்றவரும், மறைக் கதவத்தை அடைத்தவரும், பாண்டியனுக்கு அருள் புரிந்தவரும், மதுரையில் அமணிருளை அகற்றினவரும், ஆற்று நீரும், நெருப்பும் தமது ஆணையின் மொழிப்படி பணி புரியப் பெற்றவரும், ஆண்பனையைக் காய் ஈன வைத்தவரும், ஆயிரம் பொன் அரனாரிடம் பெற்றவரும், எலும்பைப் பெண்ணாக்கினவரும், தமது திருமணத்துக்கு வந்தவர்க்கெல்லாம் வீடு பேறு அருளியவரும் ஆன எந்தை திருஞானசம்பந்த மூர்த்தியே என் உயிர்த்துணையாவார்.

28. ஏயர்கோன் கலிக்காம நாயனார்

"நான் வழியடிமையாயிருக்கவும் புதிய தொண்டன் ஒருவன் வந்து எனது பிணியைத் தீர்ப்பது நன்றோ! இறைவா! அணுகுதற்கரிய உன்னை ஒரு பெண்ணிடத்துத் தூதனுப்பினவனுடைய முகத்தை நான் பாரேன்"-என்று சபதமிட்ட ஏயர்கோன் கலிக்காமரே எனக்கு நாளும துணையாவார்.

29 திருமூல நாயனார்

இறந்துபட்ட ஆயன் உடலில் பசுக்களின் துயரை நீக்க வேண்டிப் புகுந்தவரும், உலக இருளை நீக்கத் திருமந்திரமாலை மூவாயிரம் பாடல் ஆண்டுக்கு ஒன்றாக இயற்றினவருமான திருமூல நாயனார் என்னையும் ஆண்டருளுவாராக. |